பக்கம்:திருவருட்பா-11.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருவருட்பா

இக் கலத்தில் ஆனித் திருவிழா, மாசித் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாக்கள் மிக்க சிறப்புடன் கொண் டாடப்பட்டன. இப்போது மாசி மாதத்தில் நடைபெறும் மகிழடி சேவை பங்குனிமாதம் கடத்தப்பட்ட விழாவில் விரும்நாள் நடத்தப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. இந்த உண்மை அப்பர் திருத்தாண்டகத்தில் வரும், ‘உத்திர நாள் தீர்த்தமாக ஒளி திகழும் ஒற்றியூர்’ என்று கூறி இருப்ப தலுைம் தெரிய வருகிறது. அந்த நாளில் படப்பக்கநாதரை எழுந்தருளச்செய்து சுந்தரர் புராணம் வாசிக்கப்பட்டது.

குலோத்துங்கன் சோழன் மண்டபத்தில் நாள் தோறும் ஐம்பது அடியார்களுக்கு அன்னம் அளிக்கப்பட்டது. இதற். காக முதல் குலோத்துங்கன் பனப்பாக்கம் என்னும் ஊரை எழுத்தறிவார் நல்லூர் என்று பெயரிட்டு அதில் ஒரு பகுதியை நிவந்தமாக அளித்தனன், இங்குள்ள வியாகர்ண மண்டபம், துர்க்கை ஆண்டி நாயகல்ை கட்டப்பட்டது. மண்ணேக்கொண்ட சோழன் மண்டபம் கோடி, தொடர் புடைய வழக்குகளே விசாரிக்கப் பயன்பட்டது. கோலு, வெளிப் பிராகாரம் கட்டியவர் சேதிராய தேவர். அங்கு அளக்கும் கருவியின் பெயர் அருமொழித்தேவன் நிாழி எனப்பட்டது. இதகுல் நெய், நெல் முதலியன அளக்கப் பட்டன. இறைவன் திருப்பெயரான படம்பக்கநாதன் என்பது கோயில் நாயகம் செய்து வந்த ஒருவனுக்கு படம்பக்க நாயகப்பட்டன்’ என்று பட்டப்பெயராகச் குட்டப்பட்டது.

திருவொற்றியூர் இன்னுேரன்ன மாண்புகளுக்கு உறை விடமாக இருப்பதாலும், நம் ஐயா பாடியுள்ள வடிவுடை மாணிக்க மாலைக்குரிய இறைவியார் வீற்றிருக்கும் பதி ஆதலிஅலும் நம் ஐயாவிற்கு இத்தலத்து இறைவு சோறளித்துத் திருவருள் புரிந்தமையாலும், சீர்கொண்ட ஒற்றிப்பதி” என்று நம் வள்ளலார் காப்புச் செய்யுளில் எடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/28&oldid=681723" இலிருந்து மீள்விக்கப்பட்டது