பக்கம்:திருவருட்பா-11.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்க மாலை 1 இ.

ப்ேபில் போற்றிப் புகழ்ந்திருகின்றனர். இதனுல்தான் இவ்வ: அாக விரிவாக இத்தலத்தின் மாண்பு எடுத்து எழுதப்பட்டது.

இறைவி, இறைவனின் இடப்பக்கத்தே இருந்து காட்சி அரிப்பவள் ஆதலின் ‘ஒற்றிப்பதி யுடையான் இடம் சேர்ந்த மணிவார் கொண்ட கொங்கை வடிவாம்பிகை” எனப் 4.4.ட ஸ், இறைவியின் கொங்கை மானிடப் பெண்களுக்கு அமைந்த கொங்கை போன்றதன்று. அவளுடைய இரு கொங்கைகள் அபர ஞானம், பர ஞானம் ஆகிய இரண்டின் அறிகுறியாகும்.

இந்த உண்மையினே கருது ஞானம் பொழிதனமும்” எனவும், பரஞான தேசுமலிதரு கொங்கை’ எனவும் மங்க ளாம்பிகை பிள்ளேத்தமிழ் கூறுதல் காண்க. இறைவி அழகம்மையாக இருத்தலின், வடமொழியினர் வடிவாம்பிகை என்று கூறி மகிழ்வாராயினர். இறைவனேயும் இறைவியையும் பிணித்தற்குரியவை (கட்டுதற்குரிய) பாமாலைகளே ஆகும். இப்பாமாலைகளையே இருவரும் விரும்புவர். சொற்றமிழ் பாடு கென் ருர் தூமறைப்பாடும் வாயா “ என்னும் சேக் கிழாரின் செம்மை சான்ற மொழியையும், பல்மாலத்திரள் இருக்கத் தமை உணர்ந்தோர் பாமாலைக்கே நீ தான் பட்சம் என்று நன்மாலையில் எடுத்துச் சொன்னுர் நல்லோர்’ என்று. தாயுமாளுர் கூறியுள்ள கருத்திகளயும் காண்க. இதனுல் தான் வள்ளலார், ‘ வடிவாம்பிகை தன் மலர் அடிக்குத் தான் கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்த என்றனர்.

விநாயகப் பெருமான் விக்னேஸ்வரன் (துன்பங்கனே நீக்கும் பெருமான்) ஆதலாலும், போற்றுநர்க்கு அறக்கருணை புரிந்து அல்லார்க்கு நிகரில் மறக்கருணை புரிந்து ஆண்டு கொள்ளும் நிருமலன் ஆதலாலும், திருவாக்கும், செய் கருமம் கைகூடும், செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் ஆனே முகன் ஆதலாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/29&oldid=681724" இலிருந்து மீள்விக்கப்பட்டது