பக்கம்:திருவருட்பா-11.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 2 #

தெய்வம் என்றும், நல்ல தெய்வப்பற்றுள்ள ஒவ்வொருவரும் வெற்றியின் பொருட்டும், துன்பம் நீங்கும் பொருட்டும் இவரை வணங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. இதையும்

இங்கு நின்வு கொள்க.

“The Elephant Head of Ganesa is a symbolica; representation of Victory. Hence, at the commencemont of every understanding the ethodox Hindu offers prayers to this God to bless him with success.” —“War in Ancient drehi.”

பல்வேறு வடிவில் காணப்படும் விநாயகர் உருவங்களில் ஏரம்ப கணபதியும் ஒருவர்.


விநாயகப் பெருமான் அன்பர்கட்கு அருள் செய்யு: முறையில் முப்பத் திரண்டு திருவுருவில் காட்சி அளிப்பதாகத்


தெரிகிறது, அம் முப்பத்திரண்டனுள் ஒன்றே ஏரம்ப கணபதி திருவுருவம் ஆகும். இவ்வுருவத்தில் ஐந்து யானே முகங்களேக் கொண்டு, பத்துக் கைகளுடன், பசுமை கலந்த கருமை நிறத்தோடு சிங்க வாகனத்தில் அமர்ந்து கணபதி காட்சி அளிப்பர். பத்துக் கரங்களில் ஒன்று அபயத் திருக்கர மாகவும் (இஃது இடக்கரம். திருவடியைச் சுட்டும் முறையில் கீழ்நோக்கி இருக்கும்.) மற்றாென்று வரதத் திருக்கரமாகவும் (இது வலத்திருக்கரம், காப்பாற்றுவேன் என்னும் குறிப்பில் மேல் நோக்கி இருக்கும்) அமைந்திருக்கும். ஏனேய் எட்டுத் திருக்கரங்களில் பாசம், தந்தம், அட்சமாலே, மாலே, பரசு (கோடரி) சம்மட்டி, மோதகம் (கொழுக்கட்டை} பழம் பொருந்தி இருக்கும்.

இத்தகைய பெருமானேயே நம் ஐயா முதல் பாட்டில் குறித்து குளுலய ஏரம்பனே’ என்று விளித்து வணங்கி :புள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/31&oldid=681727" இலிருந்து மீள்விக்கப்பட்டது