பக்கம்:திருவருட்பா-11.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருவருட்டா

கடல் அமு தே.செங் கரும்பே அருள்கற்ப கக்கனியே உடல் உயி ரேஉயிர்க் குள் உணர் வே உணர் வுள் ஒளியே அடல்விடை யார்ஒற்றி யார்இடம் கொண்ட அருமருந்தே மடல் அவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.

(பெ. - ரை. திருப்பாற் கடலில் தோன்றும் அமுதம் போன்றவளே! செங்கரும்பைப் போல இன்பரசமே! திருவரு அளச் செய்கின்ற கற்பக விருட்சத்தில் தோன்றும் பழம் போன்றவளே. உடலில் நிறைந்த உயிர் போன்றவளே! உயிர்க்குள் விளங்கும் மெய்ஞ்ஞானமே உணர்வுள் ஒளி யாய் விளங்குபவளே! வன்மை மிக்க இரடப வாகனத்தில் எழுந்தருளி அன்பர் கட்கு அருள்செய்கின்ற திருஒற்றியூர்த் தியாகேசப் பெருமானின் இடப்பாகத்தைக் கொண்ட அருமையான மருந்தாக இருப்பவளே! ஞான இதழ்கள் விரிந்த மலராக விளங்குபவளே! வடிவுடை மாணிக்கமே.” (st — gij.)

(அ - சொ.) அடல் - வன்மை. விடை - இரடபம். உணர்வு - மெய்ஞ்ஞானம் ,

(இ . கு.) அடல், உரிச்சொல்.

(வி - ரை.) உடல் சடப்பொருள், உயிர் சத்துப் பொருள். சித்துப் பொருளாகிய உயிர் கலந்தால் அன்றி. மற்றைப்படி சடப்பொருளாம் உடல் செயல்படாது. ஆகவே அதனைத் தொழிற்படுத்த உயிர் இன்றியமையாதது ஆதலின், இறைவியை ஈண்டு உடல் உயிரே என்றனர். உயிர் சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மையது. உயிர் புலியின் உடலில் சேரின் கொடுமைக் குணமும், பசுவின் உடலில் புகின் அமைதித் தன்மையும் அடையும். ஆகவே, அவ் வுயிர்க்கு அமைதியும், இறை அன்பும் தேவை. எனவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/32&oldid=681728" இலிருந்து மீள்விக்கப்பட்டது