பக்கம்:திருவருட்பா-11.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமா8ல 3

அவற்றைக் கொடுப்பது உணர்வு (மெய்ஞ்ஞானம்) ஆதலின், அத்தகைய வடிவாய் இறைவி விளங்கலின் உயிர்க்குள் க. ாைர்வே’ எனப்பட்டனள்.

திருஒற்றியூர் த் தேவியின் திருப்பெயர் வடிவுடை அம்பான் என்பது. அப்பர் இத்தலத்துப் பதிகத்தில் * வடிவுடை மங்கையும் தாமும்’ என்று குறித்திருப்பதையும் உணரவும். ஆணுல், வள்ளலார் வடிவுடை மாணிக்கம் என்னும் பெயரால் குறிப்பிடுகின்றர்.

ஒற்றித் தியாகர் மாணிக்கத் தியாகர் ஆதலின், இறைவி யாரும் வடிவுடை மாணிக்கம் ஆயினர். மேலும் இறைவிக் குரிய திருப்பெயர்களில் மாணிக்கவல்லி என்பதும் D. இதனை மீனாட்சி அம்மன் பிள்ளேத்தமிழ், ‘மலே வல்லி, கற்பூர வல்லி, அபிராமவல்லி, மாணிக்கவல்லி மரகதவல்லி, அபிடேக வல்லி என்று கூறுகிறது. ஆகவே, நம் வள்ளலார் திருஒற்றி ஆர்த் தேவியின் சிறப்புப் பெயராகிய வடிவுடை அம்மை என்பதோடு, பொதுப் பெயராகிய மாணிக்கவல்லியையும் இனத்து வடிவுடை மாணிக்கமே’ என்று பாடி மகிழ்ந் தார் என்று கூறினும் அமையும். (t )

அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசத் குணியேனம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலேக் கோன்தவமே பணியேன் பிழைபொறுத் தட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா மணியே.என் கண்ணுள் மணியே வடிவுடை மாணிக்கமே.

(யொ ரை) அலங்காரப் பொருளே! அழகைத் தன் னிடத்தே கொண்ட ஒற்றித்தியாகர் அன்பைப்பெற்ற நல்ல குணவதியே! எங்கள் வாழ்க்கைக் குலதெய்வமே மலே அரசன் செய்த தவத்தின் பயனுக, அவனுக்குத் திருமகளாய் வந்தவளே! உன்னை வணங்காதவனுகிய நான் செய்யும் தவறு களைப் பொறுத்து ஆட்கொண்ட தெய்வநாயகன் தன் இடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/33&oldid=681729" இலிருந்து மீள்விக்கப்பட்டது