பக்கம்:திருவருட்பா-11.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 5 திருவருட்பா

சுரத்திலும், மயிலாடு துறையிலும் (மாயூரம்) மயில் வடிவில் இறைவனைப் பூசித்துள்ளமையின், மயிலே எனப்பட்டாள். இவ்விரண்டு ஊர்களின் பெயர் ஒற்றுமையினக் காணவும். அடர்ச்சி கருதியும் கருமை கருதியும் காடு மாதர்களின் கூந்த லுக்கு உவமை கூறப்படும். நாம் சுவைக்கும் கரும்புக்கும் இடையிடையே கணுக்கள் இருப்பதைக் காண்கின் ருேம். ஆல்ை, இறைவியாகிய கரும் புக்கு அருளே கணுக்களாக அமைந்துள்ளன. ஆகவே, அருள் கண் கரும்பே’ என்று சிறப்பிக்கப் பட்டாள். தேன் உடல் நோயைப் போக்கும் பொருள். ஆல்ை இறைவியாம் தேன் உயிர்க்குரிய பிறவி நோயைத் தீர்ப்பது. ஆதலின் இறைவி தேனே எனப்பட்டாள். திருவாசகமாகிய தேனும் பேரின்ப நிலையாம் வீட்டைத் தரும் என்றும் கருத்தில் தான்,

தொல்லை. இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லே மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகம்என்னும் தேன். ‘ என்னும் பாடலும் எழுந்தது. திருஒற்றியூர், மாநகர் என்ற மைக் குரிய காரணத்தைக் காப்புச் செய்யுள் விரிவுரையில் காண்க.

‘ குவளைக் கண்ணி கூறன் காண்க’, என்று கூறிய மாணிக்கவாசகர், அவளும் தானும் உடனே காண்க,’ என்றும், அவரே ஏகம்பத்துறை எந்தாய் போற்றி” என்றதும் உடனே, பாகம் பெண்ணுரு வானுய் போற்றி என்றும் கூறி இருப்பதும், பரஞ்சோதியார், சத்தியாகிச் சிவமாகித் தனிப்பர முத்தியான முதல்’ என்று அறிவிப்பதும் இறைவனும் இறைவியும் வேறல்லர் என்னும் உண்மையை உணர்த்துவன ஆகும். இந்தக் கருத்தில்தான் சிவ சத்தியே’ என்று கூறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/36&oldid=681732" இலிருந்து மீள்விக்கப்பட்டது