பக்கம்:திருவருட்பா-11.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமா8ல 33

பொன்போல் ஒளிவிடும்’ என்றனர். ஆகவேதான் ப்ொன் அற்புதஒளி” எனப்பட்டது. மலர் என இலக்கியங்களில் வருமாளுல் அது தாமரை மலரையே குறிக்கும். ‘பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை’ என்று அப்பரும், பூ எனப் படுவது பொறி (இலக்குமி) வாழ் பூவே’ என்று சிவப்பிரகாச ரும் கூறுதல் காண்க.

இறைவியின் திருக்கண் பார்வையால் இலக்குமி செல் வத்திற்குரியவளாகவும், கலைமகள் கல்விக்குரியவளாகவும் இருத்தலின், அப்பேறுகளே அளித்த இறைவியை இருவரும் தொழவேண்டியது கடமை ஆயிற்று. அம் முறைக்கு இணங்க இலக்குமியும், சரசுவதியும் உமாதேவியை வணங்குவார் ஆயினர். இலக்குமியும், சரசுவதியும் கியதைக் குமர குருபர சுவாமிகள் தம் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில், தவளமலர் வரும் இளமின்னெடு சத தளமின் வழிபடும் தையல்’ என்று கூறுதலேயும், மாதவக் சிவஞான சுவாமிகள் பணியவரு பங்கயச் செல்வி முதலோர் ஏர்பூத்த அம்பிகை அரவிந்த மலர் கூம்ப’ என்று அமுதாம் பிகை பிள் இளத் தமிழில் குறிப்பிடுதலையும் காண்க.

அபிராமி அந்தாதி இலக்குமி இறைவியை வண்ங்கிப் போற்றுதலே, மலர்க்கமலே துதிக்கின்ற மின்கொடி” என்கிறது. (6)

கண்ணே அக் கண்ணின் மணியே மணியில் கலந்தொவிசெய். விண்ணே வியன்ஒற்றி யூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும் பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்அமுதே மண்ணேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ - ரை.) கண்ணே அக்கண்ணுக்குள் விளங்கம்

மணியே. அத்தகைய மணியில் கலந்து ஒளி செய்கின் து

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/43&oldid=681740" இலிருந்து மீள்விக்கப்பட்டது