பக்கம்:திருவருட்பா-11.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருவருட் பா

சிதாகாச வடிவினளே! பரந்த திருஒற்றியூர் இறைவனுடைய இடப்பாகத்தில் வீற்றிருக்கும் பெண்ணே மலை அரசன் பெற்ற பெண்மணியே ! தெய்வமாகிய பெண்ணமிர்தமே : உலகப்பற்றை ஒழித்தவர்கட்கு வாழ்வளிக்கும் வாழ்வே ! வடிவுடை மாணிக்கமே ! ‘’ (எ - து.)

(அ - சொ.) விண் - ஆகாயம். வியன் - பரந்த” அண்ணல் - பெருமையில் சிறந்தோன் தலைவன். வாமம் - இடப்பக்கம். வீற்றிருத்தல் - சிறப்புடன் இருத்தல். நேயம் - பற்று. மண் - உலகு. நீத்தவர் - ஒழித்தவர்.

(இ.கு.) வியன், உரிச்சொல். அண்ணல், விகுதிபெருத ஆண்பால் சிறப்புப் பெயர், மண் - நேயம்.

(வி ரை.) மணி என்பது கண்ணிற்குள் விளங்கும் பாப்பா எனும் உருவம். கண்ணில் மணி இருப்பினும் இருட் டில் அக் கண் ஒளி பயன் தருவதில்லை. அது பயன்படச் சூரியன் ஒளி தேவைப் படுகிறது. அதுபோல இறைவியின் ஒளி இன்றியமையாது என்பதனே விளக்கவே, ‘மணியில் கலந் கிதாளிசெய் விண்ணே’ என்றனர். மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ், திண்தோள் வலிச் சிலம்பரசன் தவித்துரு செல்வக் குமரி’ என்று கூறுதல் காண்க. இதுவே இங்கு மலைபெறும் பெண்மணி எனப்பட்டது. “மண்ணேயம் நீத்தவர் வாழ்வே’ எனும் தொடரைப் படிக்கும்போது, ‘தண்ணிய, யோகியர் சிந்தைக் கமலத்தடம் அகலா அனமே’’ என்னும் மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ் வரியினேயும் இங்குச் சிந்தித்தல் நலம். (7)

மலையான் தவம்செய்து பெற்ற முத் தேஒற்றி வாழ்கனகச் சிலையான் மணக்க மனக்கும்தெய் வீகத் திருமலரே அலையான் மலிகடல் பள்ளிகொண் டன்தொழும் ஆர்.அமுதே வலையசன் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/44&oldid=681741" இலிருந்து மீள்விக்கப்பட்டது