பக்கம்:திருவருட்பா-11.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருவருட்பா

‘அன்ன தோர் தடத்திடை அசல மன்னவன் மன்னிய கெளரிதன் மகண்மை ஆகவும் தன்னிகர் இலாஅரன் தனக்கு நல்கவும் முன்னுற அருந்தவம் முயன்று வைகினுன்’

மெய்த்தவம் இயற்றிய வெற்பன் காணிய,

அம்தடம் லேரும்ஒர் அரவிந் தத்தின் மேல்

பைத்ததோர் குழவியின் படிவத் துற்றனள்

எ த்திறத் துயிரையும் ஈன்ற தொன்மையாள்’ என்று கூறுகிறது.

முத்துகளில் பலவகை உண்டு. அவைகள் வட்டம், அனுவட்டம், ஒப்புமுத்து, குறுமுத்து, நிம்போளம், பயிட்டம், அம்புமுது, கரடு, இரட்டிை, சம்பத்தி, சக்கத்து, குளிர்ந்தநீர் சிவந்தநீர் என்பன. முத்துகள் பிறக்கின்ற இடங்கள், தந்தி வராக மருப்பு:இப்பி பூகம் தனிக்கதலி நந்து சலஞ்சலம் மீன்தலை கொக்கு நளினமின்னர் கந்தரம் சாலி கழைகன்னல் ஆவின் பல் கட்செவிகார் இந்து உடும்புகராம் முத்தை ஈனும் இருபதுமே” என்று இரத்தினச் சுருக்க நூல் கூறும்.

முத்துகளுக்குரிய சிறப்பிடம் தமிழ்நாடே. தமிழ் மக்களே முத்துகளே முதல் முதலில் கண்டெடுத்தவர்கள். நல்ல முத்துகள் பருமை, வட்டம், உருண்டை, ஒளி புடைமை, வெண்மை, திண்மை, மழமழப்பு, உரிய இடத்தில் தொளை உடைமை ஆகிய குணங்களுடன் இருக்கவேண்டும். மேலும், நட்சத்திரம் போன்ற ஒளியும் உருட்சியும் கொண்டனவாக இருக்கவேண்டும்.

முத்துக்குரிய குற்றங்கள் மகுர உரு, திரிபுட உரு, ஆமை உரு குப்பாயம் உடைமை, சட்டைபோன்ற படலம். இரண்டடை ஒரு பிளவு. சருச்சரை, தேன்மெழுகு போன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/46&oldid=681743" இலிருந்து மீள்விக்கப்பட்டது