பக்கம்:திருவருட்பா-11.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 திருவருட்பா

முயன்றனர். இறைவன் வல ஞன் வடிவில் வந்து நந்தியாம் சுரு மீனப் பிடித்துச் செம்படவனிடம் வளர்ந்த பார்வதி தேவியை மணம் முடித்துக் கொண்டனன், இந்த வரலாற்றுக் குறிப்பைக் கொண்டுதான் வாதஆசர் ‘மீன்வலே வீசிய கானவன்’ என்றனர். இதனைத் திருவிளேயாடல் புராணத்தில் வலைவீசின. படலத்தில் காண்க. இந்த வரலாற்றையே ஈண்டு “ அருமை மகளே.’ என்றனர். வலையான் இறைவியாம் குழவியைக் கண்டதும் அடைந்த மகிழ்ச்சியைப் பரஞ்சோதி முனிவர்,

பிள்ளே இன்மையேற் கிரங்கிஎம் பிரான்தமிழ்க் கூடல்:

வள்ளல் நல்கிய மக விது வேளன வலத்தோள்

துள்ள அன்புகூர்ந்தெடுத்திரு தோள் உறப் புல்லித்

தள்ள ருந்தகைக் கற்பிளுள் தனதுகைக் கொடுத்தான் “ என்று கூறுகிரு.ர். ஆகவே, இறைவி வலையரசன் அருமை மகள்தானே !

இங்ஙனம் இறைவி வலேயரசனுக்கு அருமை மகளாகப் பிறந்தது அவளது இரக்கப் பண்பும் கருனேப் பொழிவும் ஆகும் என்பதை மாதவச் சிவஞான சுவாமிகள் தம் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில்,

  • வளம்பெருகும் இமையவரும் ஏத்தொணுப்

பெருமாட்டி மகிமைஎன் புன்மொழிகளால் வாழ்த்தரிய தாம் எனினும் ஆங்கவள்

கிரிக்கிறைவன் மகளாகி யதும்அல்லால் உளம்கொடியர் வாழ்வலேச் சேரியினும்

அவதரித் தொளிர்பாசி சங்குபூட்டி உள் மகிழ்ந் தருளுதலின் என்மொழிக்

கும்பெரி துவந்தருள் சுரக்கும்.எனவே ‘ என்று பாராட்டிப் போற்றியுள்ளனர். (8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/50&oldid=681748" இலிருந்து மீள்விக்கப்பட்டது