பக்கம்:திருவருட்பா-11.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே

காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச் :ே படர்செல்வப் பொன்னே துரச் செழுங்கனியே தமன் படர்ஒற்றி பூர்வாழ் பவளத் தனிமலயின் வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.

(யொ 1ை.) சிற்றின்ப இச்சையில் படிந்த மனமுடை பவர்களின் கனவிலும் கானப்படாத இன்பம் நிறைந்த செல்வமாம் பொன்னே! இனிய வளமான கனியே! மலே அணிந்த திருஒற்றியூரில் வாழ்கின்ற பவளம்போலும் செந் நிறம் படைத்த ஒப்பற்ற மலேயின் இடப்பக்கத்தே படர்கின்ற பூங்கொடியே! வடிவுடை மாணிக்கமே! (எ . து.)

(அ - சொ.) சேமம் - இன்பம். மதுரம் . இனிமை. தாமம் . மால்ே வாமம் . இடப்பக்கம். பைங்கொடி .

பச்சைப் பூங்கொடி (இறைவி). தனி - ஒப்பற்ற.

(இ - கு.) கனவினும், உம் இழிவு சிறப்பு, பவளமலே, உருவகம், பைங்கொடி, உவம ஆகுபெயர்.

(வி - ரை.) இறைவி காமுகர்களுக்கு அருள்புரியா தவள் ஆதலின், காமம் படர்நெஞ்சுடையோர் கனவிலும் காணப்படாதாள்’ எனப்பட்டாள். இறைவர் செந்நிறம் உடையவர் ஆதலின், பவளமலே எனப்பட்டார். பவளம் போல் மேனி’ என்பது அப்பர் வாக்கு. இறைவர் அளக்க லாகா அளவும், துளக்கலாகா நிலையும் தோற்றமுடையவர் ஆதலின், மலே’ என்றே கூறப்பட்டார். மலையில் கொடி படர்தல் இயற்கை, இறைவியாம் பைங்கொடி இறைவனும் மலையின் இடப்பக்கத்தே படர்ந்திருத்தலின், பவளத் தனி ம8லயின் வாமம் படர்ந்த பைங்கொடியே’ என்றனர். (9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/51&oldid=681749" இலிருந்து மீள்விக்கப்பட்டது