பக்கம்:திருவருட்பா-11.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்க:ாலே 4

அ ஆயின. இன்ைேரன்ன காரணங்களால் வேதாந்தங் நம் இறைவனுடைய உண்மை நிலையினக் கான இயலாமல் போயின. இவற்றை எல்லாம் உட்கொண்டே தம் வள்ளலார், ‘நாலே எனும் மறை அந்தங்கள் இன்னமும் ஜாடி எனப்போலே வருந்த’ என்றனர்.


வெளிஒளி என்பதற்கு வெளியும் ஒளியும் ஆன பொருள் என்றேனும், வெளியில் ஒளியாய் விளங்கும் பொருள் என்றேனும் பொருள் கொள்ளலாம். முன்னுள்ள பொருள்ேக் கருதின் உம்மைத் தொகையாகவும், பின்னுள்ள பொருளேக் கருதின் ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகவும் கொள்க.

இறைவன் ஒருவனே புண்ணியப் பொருளாய் இருப் பவன் , ‘புண் ணியா உன் அடிக்கே போதுகின்றேன்” என்று அப்பர் கூறுமாற்றால் தெளிக.

தவத்திற்கு எல்லாவற்றையும் கொடுக்கும் ஆற்றல் உண்டு. இது குறித்தே திருவள்ளுவர்,

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டும் முயலப் படும்” என் ருர், இந்தக் கருத்தில்,

நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி” என்று பழமொழி நானுறும்,

விழுப்பொருள் பரவை ஞாலம் நோற்பவர்க் குரிய ஆகும்’ என்று சீவக சிந்தாமணியும்,

“அத்தவப் பிறவியை அகற்றி மேதகு முத்தியை நல்கியே முதன்மை ஆக்குறும் இத்துகின அன்றியே இம்மை இன்பமும் உய்த்திடும் உளந்தனில் உன்னும் தன்மையே’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/55&oldid=681753" இலிருந்து மீள்விக்கப்பட்டது