பக்கம்:திருவருட்பா-11.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாகல 47

கங்கைகொண் டோன்ஒற்றி யூர்.அண்ணல் வாமம் கலந்தருள்செய் தங்கைல்ெ லாஉல கும்தந்த நீன்னை அந் நாரணற்குத் தங்கை என் கோஅன்றித் தயர்என் கோசொல் தழைக்குமலை மங்கைஅம் கோமள மானே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) கங்காதேவியைச் சடையில் வைத் அள்ளலனும் திருஒற்றியூரில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய கியருமையில் சிறந்த பெருமானுடைய இடப்பக்கத்தே இருந்து கொண்டு அன்டர்களுக்குத் திருவருள் செய்கின்ற அம்மையே : புகழ் மிகுந்திருக்கும் மலை அரசன் பெற்ற பெண்ணுகிய அழகுடைய மானே! வடிவுடை மாணிக்கமே! எல்லா உலகங்களையும் பெற்றெடுத்த உன்னை அந்த நாரா பண மூர்த்தியின் தங்கை என்று கூறுவேனே ? அல்லது அவன் தாய் என்று சொல்வேளு ? (எ . து.)

(அ - சொ.) அண்ணல் - பெருமையில் சிறந்த சிவ பெருமான். சொல் - புகழ், கோமளம் - அழகு.

(இ - கு.) நங்கை, அண்மை விளி, மான், உவம ஆகு பெயர். அன்றி, குறிப்பு வினே எச்சம்.

(வி ரை.) இறைவள் பகீரதனுடைய வேண்டுகோட் கிணங்கிக் கங்கையைத் தன் சடையில் வைத்துள்ளான். கங்கையின் வேகத்தைச் சிவபெருமான் தவிரப் பிரமன் விஷ்ணு முதலானவர்களாலும் அடக்க முடியாது. இந்த உண்மையினைப் பிரமன் உணர்ந்து பகீரதன நோக்கி, கூறிய தைக் கம்பர்,

மாக நன்ன தி புவியிடை வருகின்மற் றவள்தன் வேகம் ஆற்றுதல் கண்ணுதற் கன்றிவே றரிதால் தோகை பாகனே நோக்கிநீ அருந்தவம் தொடங்கென் றேகி ஞன் உல கனேத்தும் எவ் உயிர்களும் ஈந்தான் ‘’. என்று கூறினர். இக் கட்டளைப்படி பகீரதன் இறைவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/57&oldid=681755" இலிருந்து மீள்விக்கப்பட்டது