பக்கம்:திருவருட்பா-11.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருவருட்பச.

நோக்கித் தவம் செய்து சிவபெருமானக் கண்டு தன் கருத்தைக் கூறச் சிவனுள் கங்கையைச் சடையில் அடைத் தார். இதையும் கம்பராமாயணம்,

உந்தியம்புயத் துதித்தவன் உறைதரும் உலகுக் இந்தி ராதியர் உலகமும் நடுக்குற விசைத்து வந்து தோன்றின் வரததி லேமகள் கொழுநன் சித்தி யாதொரு சபையினில் கரந்தனன் சேர ‘

என்று கூறுகிறது.

இதைத்தான் நம் ஐயா, கங்கை கொண்டோன்.” என்தனர். இறைவியே எல்லா உலகங்களையும், உலகு உயிர்களேயும், பெற்றவள். அகிலாண்ட கோடி ஈன்று அன்ஆனயே’ என்பர் தாயுமானவர். பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே” என்பர் அபிராமிபட்டர். ஆகவே, திருமாலும் தேவியால் படைக்கப் பட்டவர்களுள் ஒருவனே! ஆக அவன் எப்படி உன் அண்ணன் என்று கூறுவது ? உன் பிள்ளே என்று தானே கூறவேண்டும்’ என்று இப்படி இருபால் கவர் உற்று இடை ஊசலாடி ஒருபால் படாத நிலயில், நாரணற்குத் தங்கை என்கோ? தாய் என்கோ’ என்றனர். எல்லா உயிர்களும் இறைவியின் பிள்ளைகள் என்பதைப் பெரிய நாயகி அம்மை கலித்துறை,

சோதிப் பதிஅன்றி வேறொரு தெய்வம் தொழுதற்கில்லை. ஓதில் பிறர் என அச்சம் உருல்ை உயிர்கள் எலாம் நீதிப் புதல்வர்கள் ஆயின. ஆதலின் நீகொள்கற்புப் பேதிப்ப தன்றுகண் டாய்குன்றை வாழும் பெரியம்மையே’

என்று பாடுகிறது. (12)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/58&oldid=681756" இலிருந்து மீள்விக்கப்பட்டது