பக்கம்:திருவருட்பா-11.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருவருட்பா

திலையில் சரியை கிரியை, யோகம், ஞானம், என்னும் படி முறைகளே மேற்கொள்ள வேண்டும். இவற்றின் பயனுல்: ஒரு பொருளில் விருப்பமும், ஒரு பொருளில் வெறுப்பும் இன்றி எல்லாவற்றையும் ஒன்றாகவே கருதவேண் டும். இந்த திலேயே இருவினை ஒப்பு எனப்படும். இந்நிலையை உற்றால் சத்தியின் திருவருள் ஆன்மாவில் பதியும். இப்படிப் பதி தலைச் சத்தினிபாதம் என்பர். இதனுல் ஞானப் பேற்றினேப் பெறலாம். சத்தினியாதத்தைத் திருவருள் வீழ்ச்சி என்பர். இந்த உண்மைகளே எல்லாம். திருமந்திரம்,

‘இரு வினே நேர் ஒப்பில் இன் அருள் சத்தி குருஎன வந்து கு ண ம்பல நீக்கித் தருமென ஞானத்தால் தன்செயல் அற் ருல் திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே” என்கிறது. இவ்வாறெல்லாம் இறைவி:ஆன்மாவிற்குத் திருவருள் புரிந்து அதனே முத்தி உலகுக்குத் தகுதியுடையதாகச் செய்யும் கருனேத் திறத்தை நம்: ஐயா, மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ” என்று சுருங்க்க் கூறினர்.

இறைவி இறைவனுக்கு மனையாளாக இருப்பது அவளும் அவனும் இன்பம் துய்ப்பதற்கன்று. உலகுயிர்கள் போகத் தைத் துய்ப்பதற்காகவே ஆகும். ‘போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல்’ என்பது சிவஞான சித்தியார்.

“இணர் எரித் தேவும் தானே எரிவளர்ப் பவனும் தானே உணவுகொள் பவனும் தானே ஆகிய ஒருவன் வையம் புணர்வுறு போகம் மூழ்கப் புருடனும் பெண்ணும் ஆகி மண வினை முடித்தான் அன்ன்ை புணர்ப்பையார்

மதிக்க வல்லார்’ என்பது திருவிளே யாடல் புராணம், இந்தக் கருத்திை உளத்தில் கொண்டே மனேயாள் என நின்றதென்னே: என்றனர். (14)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/66&oldid=681765" இலிருந்து மீள்விக்கப்பட்டது