பக்கம்:திருவருட்பா-11.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 5?

பின்ான்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கெனப் பேசுவர் : முன்சன்ற பிள்ளையின் மேல் ஆசை உள்ளவர் மொய்அசுரர் கொன்சன்ற போர்க்சினம் பிள்ளையை ஏ னக் கொடுத்ததென்னே மன்சன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.

(பொ - ரை.) : மல அரசன் பெற்ற மயிலே திருஒற்றி யூரில் எழுந்தருளியுள்ள வடிவுடை மாணிக்கமே! முதல் முதல் பிறந்த பிள்ளையின் மேல் ஆசையுள்ளவர்களும், தாய்க்குமட்டும் பின்னல் பெற்றெடுத்த பிள்ளேயின்மேல் தான் அன்பு என்று சொல்லுவர். அப்படி இருக்க நீ பின்னுல் பெற்றெடுத்த இளம் பிள்ளேயாகிய முருகப் பெரு மானே மிக்க அரக்கர்கள் நிறைந்த அச்சத்தைக் கொடுக்கத் தக்க போருக்குச் செல்லப் பணித்தனையே. இவ்வாறு செய்தது என்னே ! (எ . து )

(அ - சொ) மன் - அரசன் (பர்வதராசன்.) ஆர்வம் , அன்பு. மொய் - மிக்க. இளம்பிள்ளே - முருகன். அசுரர். இராக்கதர். கொன் - அச்சம். ஈன்ற - தரும், பெற்ற.

(இ - கு.) மன், ஈற்றுக்குறை. மயில், உவம ஆகு பெயர். கொன், உரிச்சொல்.

(வி . ரை.) மொய் அசுரர் ஆவர் சூரபதுமன், சிங்க முகாசூரன், தாரகன் பானுகோபன் முதலியோர். இவர்களைக் கொல்ல முருகன் சென் ருன் ஆதலின், அதை மனத்தில் கொண்ட நம் ஐயா, போர்க்கு இளம்பிள்ளையை ஏவக் கொடுத்த தென்னே’ என்றனர். (15)

பையாளும் அல்குல் சுரர் மட வார்கள் பலருளும்இச் செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ கையாளும் நின்அடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய். மையாளும் கண்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/67&oldid=681766" இலிருந்து மீள்விக்கப்பட்டது