பக்கம்:திருவருட்பா-11.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமr&ல 53

மீனுட்சி அம்மை பிள்ளைத் தமிழ், அலைமகள் இறைவி யின் சேடி என்பதை குண்டுபடுபால்கடல் வருந்திருச்சேடி” என்கிறது. மேலும், அந்நூலே அலைமகளே இறைவியின் உயிராய் இருக்கும் சேடியாம் என்று கூறுவதை ‘உயிராய் இருக்கும் சேடியரில் மலர்மீ துதித்தவள்’ என்னும் வரியில் காண்க. இத்தகைய வாய்ப்பு ஏனைய தேவமாதர்களுக்குக் கிடைத்திலது. எனவேதான் எத்தவம் செய்தனரோ” என்று விணுவப்பட்டது. (16)

இலையாற்று நீமலர்க் காலால் பணிக்கும் குற் றேவல்லலாம் தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய் நிலையால் பெரிய தின் தொண்டர்தம் பக்கம் நீலாமையினுல் மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - கை. மலே அரசனுக்குத் திருவருள் செய்வதற் காகவே அவனுக்குத் திருமகளாக வந்துதோன்றிய வாழ்வே: வடிவுடை மாணிக்கமே! சிறு பருவத் தில் மணலால் வீடு கட்டி விளையாடும் நீ, உ ைமலர் போன்ற திருவடிகளால் இடும் சிறுசிறு G T T 1 தம்தம் தலையால் செய்யும் பெண்கள் பலருள், நீ திருமகளே மட்டும் தள்ளாமல் ஏற்றுக்கொள்ளுகிறாய். இவ்வாறு திருமகளைத் தள்ளாமல் நீ ஏற்பதற்குக் காரணம், தம்தம் நிலையில் தவருது நடக்கின்ற காரணத்தால் பெரியவர்களாக விளங்குகின்ற உன் தொண் டர்களின் பக்கத்தில், இலக்குமி இருக்க வழி இல்லாதவள் ஆதலினுல் போலும்!” (எ . து.)

(அ செ இல . வீட்டை. ஆற்றும் - செய்யும், கட்டும். பணிக்கும் - வேலே செய்யக் கட்டளை இடும். பூமகள் - இலக் குமி.

(இ = கு.) இலே, என்பது இல்லை என்பதன் தொகுத்தல் விகாரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/69&oldid=681768" இலிருந்து மீள்விக்கப்பட்டது