பக்கம்:திருவருட்பா-11.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 61

நீ இடும் வேலைகளே அன்போடு மேற்கொண்டு செய்பவள் சரசுவதியா? அல்லது திருமகளா? இதனை எனக்கு அறிவிப் பாயாக’ (எ . து.)

(அ.சொ. குழல் - கூந்தல். பொன் - அழகிய. கலைமகள் - சரசுவதி. பணி வேல்ே. கடைப்பிடித்தாள் - மேற்கொண்டு செய்தவள். அலைமகள் - இலக்குமி எற்கு - எனக்கு. அறைதி - கூறுக.

(இ . கு.) செவ்வாய்க் கருந்தாழ்குழல், என்பது முரண் தொடை.

(வி ரை.) இறைவி தெய்வ மாதர்களுக்கெல்லாம் தலைவி என் புதைக் குமரகுருபரர், ‘திருமகள், கலைமகள், தலைமகள்’ என்று கூறுதல் காண்க. மேலும் கலைமகளும், அலைமகளும் மலேயிகளே வணங்கும் பான்மையினர். தவள மலர் வரும் இளமி ைெடு சததள மலர்வரும் . இளமின், வழிபடு தையல்’ என்று குமரகுருபரரும், ‘மலர்கமலே துதிக் கின்ற மின்கொடி” என அபிரா பட்டரும் கூறுவதை உணரும்போது, இறைவி தலைமகள் என்று கூறுவது உண்மை ஆகின்றது.

இறைவி பேர் அருட்கு உறைவிடம் என்பதைக் குமரகுரு பரர் அழகுற,

‘ கிள்ளேக்கு மழலைப் பசுங்குதலை ஒழுகுதீம்

கிளவியும் களிமயிற்குக் கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும்விரி

கிஞ்சுகச் சூட்டரசனப் பிள்ளே க்கு மடநடையும் உடனடும் மகளிர்க்கொர்

பேதைமையும் உதவி முதிராப் பிள்ளேமையின் வள்ளன்மை கொள்ளுமொரு பாண்டிப்

பிராட்டி ** என்று பாடியருளினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/71&oldid=681771" இலிருந்து மீள்விக்கப்பட்டது