பக்கம்:திருவருட்பா-11.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 5

(இ . கு.) மன், கற்றுக்குறை. பொருள் நல் கல்வி, உம்மைத் தொகை. ஒகாரங்கள் ஐயம்பொருளில் வந் துள்ளன.

(வி - ரை.) இலக்குமி பொன்னத்தரும் தேவி யாதலின், அவள் பொன்’ என்றே கூறப்படுவாள், புலவர் நாவிலும், பிரமன் நாவிலும் கலைமகள் வாழ்தலின் அவள் வாணி எனப்படுவள். இலக்குமி பொன்னத் தரும் தேவியாய் இருப் பதுபோலக் கலைமகள் கல்வியைத்தரும் தேவியாய் உளள். இந்தக் கருத்தில்தான் நம் ஐயா பொன்குேடு வாணி என் போர் இருவோரும் பொருள் நல்கல்வி தன்குேடு அருளும் திறம் ‘ என்றனர். அப்படியாளுல் உமாதேவி எதைத் தருவள்?’ என்னும் விகு எழும் அன்றாே? அதற்கு விடை பார்வதிதேவி அழியாப் பொருளாகிய வீட்டின்பத்திற்குக் காரணமான ஞானத்தைக் கொடுப்பவள் என்பது. இந்த உண்மையின,

திருமகள், வலக்கண் வாக்கின் சேய் இழை இடக்கண்

(ஞானப் பெருமகள் நுதற்கண் ஆகப் பெற்றுவான் செல்வம் கல்வி

அருமை வீ டளிப்பன் யாவன் அவள் உயிர்த் துணைவன் கான ஒருமுலை மறைந்து நாணி ஒசிந்தபூங் கொம்பின் நின்றாள் ‘

என்று திருவியைாடற் புராணம் கூறுதல் காண்க. அ.மு. தாம்பிகை பிள்ளைத்தமிழ் ஆசிரியரும் இகமும் பரமும் அளிப்பவள் உமையே என்பதை இகபர பெருவாழ்வு வேட்டவர்க்கருளும் நின் இணை அடிக் கமல மலர்’ என்றனர். * மெய்ஞ்ஞான இன்பால் அருள் பிராட்டி ‘ என்பது மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ். பொதுவாகக் கருதுமிடத்து இறைவியே, ஞானம், கல்வி, செல்வம் மற்றும் யாவும் தருபவள். இந்த உண்மையினே அபிராமி அந்தாதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/73&oldid=681773" இலிருந்து மீள்விக்கப்பட்டது