பக்கம்:திருவருட்பா-11.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருவருட்பா

வெளிப்படுத்தினர். இரட்டையர்கள் என்பவர்கள் நொண்டி யும் குருடர் ஆகிய இரு புலவர்கள். குருடர் தொண்டிப் புல வரைச் சுமந்து செல்வர். இருவரும் சேர்ந்தே ஒரு பாட்டைப் பாடி முடிப்பர். இந்நிலயில் இவ்விருவரும் திருநாங்கூர்க்குச் சென்றனர். அங்குள்ள அர்ச்சகர் இறைவர்க்குப் பொங் கலைப் படைக்காமல் செங்க:ேச் சுட்டு அதன் மீது ஈரத் துணியை மூடி அதனேயே சுவாமிக்குக் காட்டிவந்தனர். சுட்ட கல்லின்மீது ஈரத்துணி மூடப்படுவதால் அதன்மீது ஆவி வந்துகொண்டு இருக்கும். இதனக் காண்பவர்கள் உண்மையில் சுடச்சுட இறைவர்க்குப் பொங்கல் படைக்கப் படுகிறது என்று எண்ணி மகிழ்வர். இந்த வஞ்சகமான செயலே மக்கள் அறியவே இரட்டையங்கள் ஒரு பாட்டைப் பாடினர்கள். அப்பாட்டே,

தேங்குபுகழ் நாங்கூர்ச் சிவனே அல் ஆளிஅப்பா நாங்கள் பசித்திருக்க ஞாயமோ-போங்காணும் கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல் சோறுகண்ட மூளியார் சொல்’ என்பது. இவற்றை எல்லாம் மனத்தில் கொண்டே நம் ஐயா, *தின் நாயகன் கந்தை சுற்றியே மட்டரையோடு நிற்பது கண்டு என்றனர். மட்டரை என்பதை மண் தரை எனப் பிரித்தும் பொருள் காணலாம். வடிவுடையம்மன் பட்டுடை யுடன் இருப்பதற்குக் காரணம் அத்தலத்தில் நிர்வாகம் சீரிய முறையில் நடந்து வந்தமையே ஆகும். இறைவி பட்டுடை உடுத்தி வருவதை அபிராமி அந்தாதி ஒல்கு செம்பட்டு உடையாளே’ என்றும் ‘அரவின் பைக்கே அணிவது பல் மணிக் கோவையும் பட்டும்’ என்றும் கூறுதல் காண்க. கசாத்துவன கோசிகமே (பட்டுச்சிலே) என்பது. தட்சயாகபரணி. திரிபுரை செம்பட்டுக் கட்டுநுசுப்பு’ என்பது திருப்புகழ், ஆகவேதான், ‘நீமட்டுமே பட்டுடுக் கின்றன என்று நகைச்சுவை தோன்ற நம் ஐயா கூறிர்ை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/78&oldid=681778" இலிருந்து மீள்விக்கப்பட்டது