பக்கம்:திருவருட்பா-11.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 6 திருவருட்பா

(இ - கு.) அனம் இடைக்குறை, கண்டாய், முன்னிக் அசைச்சொல்.

(வி - ரை.) அன்னவாகனளுகிய பிரமல்ை புகழப்படும் சிவபெருமான் எனக் கூறப்பட்டனன் ஆயினும், ஏனைய தேவர் களாலும் இறைவன் புகழப்படுபவன் என்று உணர்க. ஒரு மொழி ஒழிதன் இனம் கோளற்கு உரித்தே என்பது இவ்வாறு வருதற்குரிய இலக்கண விதி. கங்கை ஆற்றைப் பெண்ணுக, உருவகம் செய்தமைக்கு ஏற்ப அவ்வாற்று நீரில் தோன்றும் குமிழியை அக் கங்கையின் தனமாகக் கூறப்பட்டது மாற்றாள் ஆவாள், ஈண்டுக் கங்காதேவி. இறைவர் பகீரதன் பொருட்டுக் கங்கையைத் தலையில் தாங்கிளுனே அன்றி, அவளைத் துக்கித் தலையில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று வைத்துக் கொள்ளவில்லை. என்றாலும், புலவர்கள் இறைவன் பார்வதி தேவிக்கு அஞ்சியும் கங்காதேவியினிடம் கொண்டுள்ள ஆசை காரணமாகவும் தலையில் மறைத்து வைத்துள்ளான் என்று கூறுவர். இந்தக் கருத்தில்தான் ஈண்டு மாற்றாளேத் முடி தன்னில் வைத்தே ‘ எனப்பட்டது. பார்வதிதேவியார் தம் கணவர் சிவபெருமான் கங்கையாம் நங்கையை தலையில் மறைத்து வைத்திருப்பது தெரிந்திருந்தும் கோபம் கொள் ளாது இறைவளுேடு சேர்ந்து வாழ்கின்றாள் என்று பாராட்டி தம் ஐயா பாடுகின் ருர்.

இறைவி, கங்கையானவள் இறைவன் தலையில் இருப்பது பற்றிச் சினம் கொள்ளாமல், மகிழ்ச்சியே கொண்டு இருந் தாள் என்பதை மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ் வ்ேணியில் சிகரக் கங்கை மங்கை செறித்ரத்தகவின் அமர்வித்து மகிழ் மங்களச் செல்வச் செழுங்கொடி ‘ என்று போற்றிப் புகழ்கிறது. (23)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/86&oldid=681787" இலிருந்து மீள்விக்கப்பட்டது