பக்கம்:திருவருட்பா-11.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 83

என்று அறிவித்தல் காண்க. எனவேதான் அன்பர்கள் வாழ்த்து ஒற்றியூர் எம்முதல்வா’ எனப்பட்டது.

மெய் அன்பர்கள் வேண்டும் வரங்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் அன்று. அவர்கள் வேண்டும் வரங்கள் எல்லாம் இறைவனை என்றும் சிந்தித்த வண்ணம், இருப்பதற். காகவே ஆகும். இதனைப் பரிபாடல் என்னும் சங்க நூல்,

‘ யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரோயோ “ என்று அறிவித்தல் காண்க. காரைக்கால் அம்மையாரும்,

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றர் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னே

(என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்

(மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்” எனவேதான் நம் ஐயாவும் ‘நினை எப்போதும் சிந்தித்திடர் நீங்கி வாழ எனக் கருள்வாய்” என்னும் வரத்தை இறைவி யிடம் வேண்டினர். (27),

முதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவும் நடுப் முதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றித்தம் பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிதீன்தாள் மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை.) சிறந்த இத் தமிழ் அகத்தில் மேன்மை புடன் விளங்கும் திருஒற்றியூரில் வாழும்தேவியே! வடிவுடை மாணிக்கமே! மேல் உலகில் உள்ள தேவர்களுக்குள்ளே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/93&oldid=681795" இலிருந்து மீள்விக்கப்பட்டது