பக்கம்:திருவருட்பா-11.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருவருட்பா

உன்னே வணங்காதவர்கள் யார் இருக்கின்றனர். நடு உலக மாகிய இப் ஆதலத்துள்ளவர்களுள் யார் உன்னைப் புகழாத வர்கள்? கீழ் உலகத்தில் உள்ளவர்களுள் எவர் உன் திருவடிகளைப் பற்றி வணங்காதவர்கள்’ (எ . து.)

(அ சொ.) மா - சிறந்த. தலம் - தமிழ் அகம். மீதலம் - மேலுலகம். பூதலம் - மண்ணுலகம். நிதம் - தினந்தோறும். .

இ - கு.) மா, உரிச்சொல். (வி ரை.) இறைவி மேல் உலகம், நடு உலகம், கீழ் உலகமாகிய மூவுலகத்தவர்களாலும் போற்றப்படுபவள், வணங்கப்படுபவள் என்பது இப் பாட்டில் குறிப்பிடும் கருத் தாகும். நடுப் பூதலம் என்பது நாம் வாழும் மண்ணுலகம். பாதலம் என்பது நாகலோகம். 2}

சேய்க்குற்றம் தாய்பொறுத் தேட வருகெனச் செப்புவள்இந் நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவில் மதியின் தேய்க்குற்றம் மாற்றும் திருவொற்றி நாதர்தம் தேவிஅன்பர் வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - சை.) எல்லாரும் எடுத்துப் பேசுகின்ற சந்திர னுக்கு ஏற்பட்ட தேய்தலாகிய குற்றத்தை மாற்றிய திருஒற்றி யூர்ப் பெருமானுடைய தேவியே! அன்பர்கள் தப்பித்தவறித் தம் வாயால் குற்றமான மொழிகளைக் கூறினுலும் அதனேயும் போக்குகின்ற மயிலே வடிவுடை மாணிக்கமே! தம் குழந் தையின் குற்றத்தைத் தாயானவள் பொறுத்து ஏன் அடா அழுகிறாய்? இங்கே வருக என்று கூறி அன்பு காட்டுவள். அவளைப் போல, இந்த நாயாகிய நான் செய்கின்ற குற்றத் தையும் பொறுத்து என்னைக் காத்தல் வேண்டும்’ (எ . து.)

(அ- சொ) நவில் - சொல்லுகின்ற, மதி - சந்திரன். சேய் குழந்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/94&oldid=681796" இலிருந்து மீள்விக்கப்பட்டது