பக்கம்:திருவருட்பா-11.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 87

திருஒற்றியூர்த் தியாகேசப் பெருமான் கட்டிய உண்மை யான மாங்கல்ய நானேயுடைய தேவியே வடிவுடை மாணிக்கமே ‘’. (எ . து.)

(அ சொ. செங்கமலாசனன் . சிவந்த தாமரையினைப் பீடமாகக் கொண்டு வாழும் பிரமன். தேவி . சரசுவதி. பொன் - அழகிய நாண் - தாலி கயிறு. திரு - இலக்குமி. மிடறு - கழுத்து துங்கம் - உயர்ச்சி, பெருமை. மங்கல நாண் - த லி கயிறு.

(இ) - கு.) கமலம் + ஆசனம், சங்கம் + அது - ஆம் ; மிடறு + இங்கு துங்கம் + உருது + உளம் எனப் பிரிக்க. அது, பகுதிப் :ெ ருள் விகுதி. தோன்றல், விகுதி பெருத ஆண் பால் சிறப்புப்பெயர்.

(வி - ரை. திருமுதலோர் ஆவார் இலக்குமி, இந்தி ராணி முதலான தே ைமாதர்கள். இலக்குமிக்கு மங்கல தா இனக் கட்டியவன் திருமால். சரசுவதிக்குத் தாலி கயிற் றைப் புனைந்தவன் பிரமன். இந்திராணிக்கு மங்கலக் கயிற். றைக் கட்டியவன் இந்திரன், இம் மூவரும் இறுதியில் இரக்கக் கூடியவர்கள் ; ஏன் இறந்தே போயினர். இதனை அப்ப மூர்த்திகள்,

நூறு கோடி பிரமர்கள் நொந்தினுர் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர் ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.” என்று உறுதிப்படுத்தி யுள்ளனர்.

இங்ஙனம் திருமால், பிரமன், இந்திரன் ஆகிய மூவரும் இறப்பதனுல், இவர்களுடைய தேவிமாச்களின் கழுத்தில் கட்டிய மங்கல நாண் அறுக்கப்படும். ஆனல் இறைவன் ஈறு இலாதவன் ஆதலின், அவல்ை உமாதேவிக்குக் கட்டப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/97&oldid=681799" இலிருந்து மீள்விக்கப்பட்டது