பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

‘ஐ'புலன்களை வெல்ல வேண்டும்; அறிவினையும் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்; மானிடச் சமு தாயத்தின் மேன்மைக்காகப் பாடுபட வேண்டும்; பிறரை உண்பித்து உண்ண வே ண் டு ம்; மகிழ்வித்து மகிழ வேண்டும்; வாழ்வித்து வாழ வேண்டும்.

இத்தகைய வாழ்க்கை நெறியில் நாம் வாழ்ந்திட அருள் புரிய வேண்டும் என்று நாளும் இறைவனைப்பிரார்த்திப் பதற்கு ‘திருவருட்சிந்தனை’ என்கிற இந்த நன்னூல் வழி காட்டும். -

ஒவ்வொரு நாட் காலையிலும், எத்தகைய உறுதி மொழியை, ஒவ்வொருவரும், எடுத் து க் கொண்டாக வேண்டும் என்பதை தெரிவிக்கிறது. முதல் பிரார்த்தனையே இந்த ஆண்டினை உழைப்பு ஆண்டாக்கி செலவிட உறுதி எடுத்துக் கொள்ள, அருள்செய் என்பதாக இறைவனை வேண்டுவதாக அமைந்துளது. -

எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டு கொண்டும், கடந்த காலத்திற்காகக் கண்ணீர் சித்திக் கொண்டும், நிகழ் காலத்தை வீணடித்துக் கொண்டும் காலம் . கழிக்கும் காலத்தின் அருமை தெரியாதவர்களுக்காக மேலும் பல பிரார்த்தனைகளும் இந்நூலில் படைக்கப் பட்டிருக்கின்றன.

இறைவனையும் ஐந்தொழில் நிகழ்த்தும் முதல் உழைப் பாளி’ என்று அழைத்துச் சிறப்பிக்கும் அடிகளார் இடையீடு இல்லாது, ஒய்வே இல்லாது தற்செயல் விடுப்புகட்ட இல்லாது, இறைவன் உழைக்கும் உழைப்பின் திறத்தை எடுத்துக்காட்டி பலரையும் உணர வைக்கிறார்.

உண்டு நடமாடும் நடைப் பினங்களாக, வாழும் பல மாத்தர்கள் தாமே திருந்த எத்தகைய பிரார்த்தனைகளைப் பிரார்த்திக்க வேண்டும் என்பதாகவும் அடிகளார் சிந்தித்

திருக்கிறார்.