பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளச் +09

இறைவா, வாழ்வை அருட்சோலையாக்கி அாள்க:

இறைவா, நன்னெறியே! நெறியின் பயனே! நின் திரு வருள் போற்றி! போற்றி! இறைவன், ஓர்மை: ஒர்மை என்ற சொல் தரும் பொருள், பயனுடையது. என் வாழ்க்கை வாழ்க்கையின் வார்த்தைகள், செயல்கள் நீரில் குமிழி யென ஆகாமல், நிலைத்தன்மை உடையுணவாக அமைதல் வேண்டும். . - - .

என் வாழ்க்கையின் குறிக்கோளில் ஒருமை வேண்டும். குவிந்த கதிரொளி மிகு ஆற்றலுடையது. மழைநீர்த்துளி களே திரண்டு பெரு வெள்ளமெனப் பாய்ந்து பயன்படு கின்றன. பல நூறாயிரம் காசுகள் கூடி ஒன்று சேர்ந்தால் தான், செல்வம்.

ச்ெல்வமே மனித வாழ்க்கைக்கு முதலாக அமையும். அதுபோல என் ஆற்றல், ஒரு குறிக்கோளில் ஒருமைப் படுத்தப் பெற்றுப் பாடுறுதல் வேண்டும். -

ஒரு மனம் வேண்டும். இறைவா, என்ன சிரிக்கிறாய்.

இல்லை இறைவா! எனக்கு இருப்பது ஒரே மன்ந்தான்: ஆனால் அது அடிக்கடி மாறுபட்டுத் திரிவது ஆற்றொன த் துயரத்தைத் தருகிறது. ~ * . . * * :

நட்டம் ஈட்டம் என்ற சுருக்குக் கயிறுகள் என்னை இழுத்து அலைக்கழிவு செய்கின்றன! எவ்வளவு மோசமாகி இருக்கிறேன். ஆதாயம் இருந்தால்தான் நான் செயல் படுகிறேன்.

முறைகேடான ஈட்டம் கொள்ளை. ஈட்டம். கருதியே வாழ்தல், பழகுதல் விபசாரம் அல்லாமல் வேறு என்ன? இறைவா, என்னைக் காப்பாற்று. - - -

என் வாழ்க்கை நன்னெறியில் நடைபயிலுதல் வேண் டும். நட்டம் ஈட்டம் பற்றிக் கவலையில்லை. என்வாக் கினை வாய்மையாக்கி, வாழ்வை வளமார்ந்த அருட்சோலை யாக்கி அருள் செய்க! -