பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 திருவருட் சிந்தனை

SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS . ---------------------------- -------

அழுக்காறு அகல் அருள் வாழ்வினை அருள்க!

SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAM SAAAAA AAAASASASS SSASAS SSAS SSAS SSAS SSAAAA AAAAA

இறைவா, உயர்மலைகளில் எழுந்தருளியுள்ள இறைவா! படிகளைக்கடந்து தின் சந்திதிநோக்கி எறி வரும்பொழுது கால் கடுக்கிறது. ஆனாலும் ஏறியபிறகு உன் அழகிய திருக் கோயிலில், நீ வழங்கும் அருள், உடல் நலம், உயிர் நலம், உணர்வு நலம் அனைத்தும் கிடைக்கின்றன.

வாழ்க்கை, பள்ளத்தில் கிடக்கிறது. குணம் என்னும் குன்று ஏற வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி என்னும் பள்ளங்கள், பொச்சாப்பு, பொய்ம்மை, அறி யாமை ஆகிய பள்ளங்கள், வறுமை எனும் ப்டுகுழி ஆகிய வைகளிலிருந்து கரையேறி குணம் என்னும் குன்றேறுதல் வேண்டும். . - உடல்வருத்த உழைத்தல், பிறர் மகிழத் தாம் மகிழ்தல் என்ற நெறிகள் வழி அழுக்காற்றினைக் கடக்கலாம். பிறர் வாழ்க்கையைக் கண்டு தன் தகுதிக்குமேல் அவாவுறுதலைக் தவிர்த்தல் மூலம் அவாவினைக் கடக்கலாம்.

அவ1-அழுக்காற்றினைக் கடந்தாலே வெகுளி, இன்னாச் சொல்வினைக் கடக்க்லாம். நல்லன நினைந்து பழகுதல் மூலம் பொச்சாப்பின்ைக் கடக்கலாம். யாருக்கும் தீங்கு செய்யாதிருத்தல் என்ற நெறிவழி பொய்ம்மையைக் கடக்கலாம். -

கல்வி, அனுபவங்கள் மூலம் அறியாமையைக்கட்க்கலாம் பொருளினைச் செய்தல் மூலமும் வரவுக்கு மேல் செலவைத் தவிர்ப்பதன் மூலமும் வறுமையைத் தவிர்க்கலாம். - இறைவா, அழுக்காறு முதலியன அகல, அருள் தயக்கும் வாழ்வினை அருள்க செய்க வாய்மை தவறா வாழ்க்கையை அருள் பாலித்திடுக! வறுமையாம் சிறுமை தப்பி வளமாக வாழ்த்திடத் திருவுளம், பற்றுக.

குணமென்னும், குன்றேறி நின்று தின் திருவடிக்குத் தொழும்பாய் ஆட்செய்யும் பேற்றினை அருள் ச்ெசிக்