பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 133

முறையாக எல்லாப் பணிகளும் செய்ய அருள்க!

இறைவா, குலச்சிறையார் போற்றி வணங்கிய இறைவா! இன்று நீ எனக்கு இடும் பணி யாது? இன்றைய சமூக அமைப்பு நான்குபுறமும் கலகலத்து வருகிறது. நோக்குந் திசைதோறும் அமைதி இல்லை. * ,

நான், நான்கு திசையிலும் ஓடி அலைகிறேன். எல்லாம் அவசியம் போலத் தெரிகிறது. ஆனால், ஒன்றையும் உருப் படியாகச் செய்ய முடிவதில்லை. நின்னருளிச் செயலில் யாதொரு குறையுமில்லை. என் முயற்சியிலும் குறை யில்லை. - - -

இப் பிறப்பில் யானறிந்து, பணி செய்யாத நாள் இல்லை. ஆயினும், சமூகம் எழுந்திருக்க முடியாத அளவுக்குப் பிரி வினை வாதம் பிடித்தும், ஆணவம் பிடித்தும், படுத்துக் கிடக்கிறது. -

நின் சந்நிதியில் தொழும்பாய்க் கிடந்து தொண்டு செய்ய வேண்டும். இது என் ஆசை. நின்னருட் பேற்றிற் குரிய மக்களுக்குப் பணி செய்ய வேண்டும். படிக்க. வேண்டும். எழுத வேண்டும். இத்தனை ஆசைகள். இறைவா, நான் என்ன செய்ய? - -

நீ பணித்திடும் பணியைச் செய்ய மனம் ஒருமைப் படு கிறது. அனைத்துப் பணிகளும் தேவைதானா? முறைப் படுத்தி செய்தால் எல்லாம் செய்யலாம் என்பது தின் அருட் பாலிப்பு. . . . .

குலச்சிறையார் அமைச்சுப் பொறுப்பிலும் இருந்தார். நின்ற்சீர் நெடுமாறனின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். மங்கையர்க்கரசியாரின் குறிக்கோளையும் அன்ட்வித்தார். தமிழ் வழக்கு அயல்வழக்கினை வெற்றி பெற, தொண்டு செய்தார். . . . . .

இறைவா, குலச்சிறையார், மங்கையர்க்கரசியார் போல, நானும் உனக்குப் பணிசெய்ய மனமிருக்கிறது. ஆனாலும், நின்னருள் துணை தேவை. : . x,*

  .

எடுக்கும் காரியம் யாவினும் வெற்றி பெறத் தருள் செய்க! சிந்தையில் தெளிவாக நின்றருன் செய்க: