பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30 திருவருட் சிந்தனை

சொல்லும் சொல்லில் அன்பு விளைய, அருள்க

இறைவா, பேச்சிறந்த பூரனமே! சொல்லாமற் சொல் லும் இறைவா! சொல்லும் சொல்லில் சிக்கனம் தேவை!

சொல்லும் சொல், அன்பில் நனைந்திருக்க வேண்டும். செல்லும் செல் பயனுடையதாக அமைதல் வேண்டும். இறைவா, சொல்லப்பேறும் சொற்களுக்கு இவ்வளவு இலக்கணம் உண்டு:

சொல் இலக்கணம் அறிந்து சொல்லும்-பேசும் அறி வினைத் தந்தருள் செய்! பொய்ம்மை பேசாதிருக்க வேண் டும். வாய்மை வழாது பேச வேண்டும். தீமை பயக்கும் சொற்களைச் சொல்லவே கூடாது.

நன்மை பயக்கும் சொற்களையே சொல்ல வேண்டும். அன்பை விளைவிக்கும் சொற்களையே பேச வேண்டும். அறிவினை வழங்கக்கூடிய சொற்களையே கூறவேண்டும். பயன் மிகுதியும் விளையும் இனிய சொற்களை கூற வேண் டும். இறைவா, அருள் செய்க!

சொல்லும் சொற்களை எண்ணிப் பார்த்து தந்திட வேண்டும். இன்ப அன்பினை வழங்குதல் வேண்டும். அறம் விளைக்கும் சொற்களையே சொல்லக் கற்றுத் தா!

இறைவா, சில சொல்லி"பல கேட்க காமுறும் பாங்கைத் தந்தருள் செய்க! சொல்லும் சொல்லில் அன்பு விளைய, இன்பம் நிறைய அருள் செய்க!