பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 திருவரும். சிந்தனை

என் செவிகளுக்கு நற்செய்திகளை வழங்கி அகுள்க!

இறைவா, கேளாதனவெல்லாம் கேட்பித்து ஆட்கொள் ளும் இறைவா! நின் கருணை என்பால் விழவில்லையே! ஏன் கால தாமதம்?

நான் எளிதில் கேட்க இயலாத மந்திரங்கனை, மந்திரங் களின் உட்பொருளை, மந்திரங்கள் அனுபவம க்கும் மெய் யுணர்வு வாழ்க்கையைப் பற்றிக் கேட்பது எப்போது? நீ வந் தருளிச் செல்லக் காலம் தாழ்த்தினால் அதுவரை என் காது கள் காத்திராதுபோல் இருக்கின்றன.

அம்மம்ம, உன் படைப்பில் என்ன விசித்திரம் திறந்த காதுகள், ஒன்றுக்கு இரண்டு: நாள்தோறும் நான் கேளாதன கேட்க முடியவில்லை. கேட்கக் கூடாதன கேட்டு விகாரப்பட வேண்டியிருக்கிறது.

இறைவா, என் காதுகளுக்கு நான் அழைக்காமலே செவி உணவு பரிமாறுகிறவர்கள் வந்து விடுகிறார்கள்! இறைவா, அபசாரம்! பரிமாறப் பெறுவது செவியுணவு அன்று.

நெருப்புத் துண்டுகளனைய தீய சொற்கள், புறங் கூறு தல், தீக்குறல்கள் இன்னோரன்ன உள்வடு ஏற்படுத்தும் தீய சொற்கள்! இறைவா, தீய சொற்களை இனிமேல் நான் கேட்கக் கூடாது.

இறைவா, நல்லவையே கேட்க வேண்டும். மற்றவர் அருங் குணங்களைப் பற்றிய செய்திகளையே கேட்க வேண் டும்! இறைவா, பிறர் புகழே, என் செவிச் செல்வம்: நின் புகழே எனக்கு உய்தி தருவது! இறைவா, இந்தப்படி என் செவிக்கு நற் செய்திகளை வழங்கி அருள் செய்க!