பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் I 39

நாளும் தின்வழியில் கொல்லாமை நோன்பு அருள்க!

இறைவா, இத்தப் பொல்லாத மனித சாதியொடு எத் தனை கோடி ஆண்டு காலமாகப் போராடி வருகின்றனை! நின் போர்க்குணம் வளர்க! வாழ்க!

இறைவா, நோன்பில் எல்லாம் உயர்ந்த நோன்பு எது? ஒன்றாக நல்லது கொல்லாமை’ உலகம் முழுதும் கொலை தவிர்க்கப் பெறுதல் வேண்டும். கொலை! அதுவும் திராயுத பாணியை, பெண்ணை, நல்லவர்களைக் கொலை செய்வது என்பது கொடுமை.

இன்றைய உலக அரசியளிலேயே, அணுகிப்பழகி நம் பிக்கையைப் பெற்று, கொன்று விடுதல் என்பது அரசியல் புத்தியாகிவிட்டது. இது கேவலம். இறைவா! உயிர்க்குலத் தைக் காப்பாற்றுக. கொலையிலிருந்து குவலயத்தைக் காப் பாற்றுக,

இறைவா, என் உள்ளத்தில் கொலை’ எண்ணம் வேண்டாம்! இறைவா, அருள் செங்க! என்னுடைய பகை வனைக்கூட கொலை மூலம் சந்திக்க நான் விரும்ப வில்லை! இறைவா, இந்த வண்ணமே அருள் செய்க!

கொலை கொடிய மனத்தில் தோன்றுவது. என் மனம் கொலை தழுவும் மனமாக மாறாமல் காப்பாற்றி அருள்க! கொலை செய்பவர்கள் ஏழேழ் பிறப்பிலும் நரகத்தில் ஆட்படு வார்கள். எங்கு வாழ்ந்தாலும் நரக வேதனையை அனுபவிப் பார்கள்.

இறைவா, கொலை என்ற சொல்லே இல்லாமல் போக வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் யாரையும் கொல்லா மனம் தந்தருள்க! நாளும் நின் வழியில் கொய்யாமை நோன்பு ஏற்க அருள்செய்க!