பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 40 திருவருட் சிந்தனை

என் செவிகள் எனக்கு உய்வைத் தர அருள்க!

இறைவா! தோடுடைய செவியை உடைய பெருமானே! என் செவிகள் செல்வத்தைச் சேர்க்கும் செவிகளாக விளங்க அருள் செய்க! -

செவிச் செல்வம் எது? செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வம் உனது பொருளுடைய புகழைக் கேட்டலே செல்வம்!

குறைவிலா நிறைவே! கோதிலா அமுதே! நன்றுடை யன், தீயதில்லான் இன்பன் காண், துன்பங்கள் இல்லா தான் காண்’ என்றெல்லாம் நின் புகழ் கேட்கப்படுதல் வேண்டும்!

இறைவா f கேட்கப்பெற்ற நின் புகழ் என் சிந்தனையாக வளர, அறிவாக மாற்றம் பெற வேண்டும்! -

நின் புகழ்மிக்க குணங்கள் என் வாழ்வாக அமைந்திட அருள் செய்க! நான் குறைகள் இல்லாது வாழ்ந்திடுதல் வேண்டும். -

குற்றம் குறைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும்: நன்றே கேட்க வேண்டும்; நன்றே செய்ய வேண்டும்! நல்ல வண்ணம் வாழ்த்திடுதல் வேண்டும்! இறைவா, அருள்.  : . -

இறைவா, என் செவிகள் என்னை வளர்க்கும் செவி களாக அழைதல் வேண்டும்! என் செவிகள் எனக்கு உய்வை தரக் கூடியன்வாக இயங்குதல் வேண்டும்:

இதுவ்ே என்து. வேண்டுகோள்: தோடுடைய செவி புனே!தோன்றாத் துணையாயிருந்து:இறைவா அருள் செய்க்: