பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 147

மற்றவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியாக அருள்க

இறைவா, நீதியே! நான் உன்னை வணங்குகிறேன். திருவிழாக்கள் கொண்டாடுகின்றேன். நான் உனக்கு ஒரு பக்தன். இது என் புறவாழ்க்கை நிலை.

ஆனால் இறைவா! என்னுடைய அகநிலையோ சொல்லும் தரத்ததன்று. சம நிலையில் நிற்பது என்பது உயர்ந்த ஒழுக்கம். எனக்கும் சமநிலைக்கும் வெகு தொலைவு.

இறைவா, எனக்குத் தேவைப்படும்பொழுது யாரிடமும் அணுகுவேன்? உ ற வு கொண்டாடுவேன்? எனக்கு வேண்டாத பொழுது என்னை அணுகிவந்தாலும் நான் பார்க்க மாட்டேன். எனக்கு ஏன் இந்த மனநிலை? இப்படி ஒரு தன்முனைப்பு நிலை? இறைவா, கூடவே கூடாதுதன் முனைப்பு அறவே கூடாது. -

இறைவா, ஆணவம் இல்லாமல் அடங்கிவாழும் அமர நிலையைத் தா. எந்தச் சூழ்நிலையிலும் நான் சம நிலையி லிருந்து பிறழக் கூடாது. இறைவா, அருள் செய்க

அ தி கா ர ப் பி த் து வேண்டாம். வேண்டவே வேண்டாம். என்றும் எப்போதும் எல்லாருக்கும் ந ன் வேண்டியவனாகவே இருக்க அருள் செய்க: நடுவு நிலை பிறழாத நன்னெஞ்சத்தை, தந்தருள் செய்க!

மற்றவர்கள் வாழ்வதைக் கண்டு மகிழும் பேருள்ளத் தினைத் தந்தருள் செய்க மற்றவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியென மகிழ்ந்து வாழும் மிக உயர்ந்தநிலையை அருள் செய்க!

  • * *