பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 - திருவருட் சிந்தனை

நின் சீருநாமம் மறவா நெஞ்சினை அருள்க!

இறைவா, உய்வார்கள் உய்யும் வகையில் ஆட் கொண்டருளும் கடவுளே! என்னை ஆட்கொள்வதற்குக் காலந்தாழ்த்துவது ஏன்? தான் உய்வது எங்ஙனம்? நான் உய்யும் நெறி எது? என்றெல்லாம் எண்ண நீ அருள் செய்யவில்லை. நீ அருள் செய்யும் பங்குடையான் இல்லை என்று கூறுவது எவ்வளவு பேதைமை!

இறைவா, நின் அருளுக்கு நான் பாத்திரமாக வேண் டாமா? சிந்தையில் தெளிவினைத் தந்தருள் செய்க! கருவுற்றநாள் முதல் உடனிருக்கும் கூட்டாளிகள் ஐவரின் கூட்டை நீக்குக. அல்லது அவர்களுக்கு மடை மாற்றம் தந்து நன்னெறிப்படுத்துக. இந்த ஐவர் என்னுடன் ஒத்துழைத்தாலே நான் உய்தி பெற்றுவிடுவேன். இறைவா, அருள் செய்க

நின் திருநாமம் மறவா நெஞ்சினை அருள் செய்க! உன்னுடைய பொருள் சேர் புகழையே கேட்கும் புண் னியப் பேற்றினை அருள் செய்க உன்னை நினைந்து ஆடி மகிழ அருள் செய்க! என்புருகிப் பாட அருள் செய்க1 நின் திருவடிகளுக்கு அரும்பொடு மலர்தூவித் தொழுது அரற்றிட அருள் பாலித்திடுக.

இறைவா நின் திருவடிகளை என் தலைக்கு அணியாகச் சூட்டிக் கொண்டு மகிழ அருள் செய்க!’ என்னை நின் ன்குள் பெறுவத்ற்குத் தகுதியில்லை என்று புறத்த்ே தள்ளதே துடைக்கினும் போகேன். நின் அருள் என் ஆவி ஆவி காத்திட நின்திருநாம் மறவ ந்ெஞ்சினை அருள்.செய்க!