பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருவருட் சிந்தனை

மண்ணையும் விண்ணையும் இணைக்கும் அன்பு அருள்க !

SA A ASMMMS SSSSSAAAASA SAAAASSSSLLSMMAAA LLLS A SAS SSAS

இறைவா, அம்மை நீ! அப்பன் நீ! ஐபனும் நீ! அன்பு டைய மாமனும் ம. மியும் நீ! என்றெல்லாம் உறவு முறை காட்டி, உயிர்களிடத்தில் அன்பினாலாய இணக்கத்தை வளர்த்திடத் திருவிளையாடல் செய்தருளும் இறைவன் நீ!

ஆனால், என்னிடத்தில் உறவுப் பண்பு இம்மியும் கால் கொள்ளவில்லையே? இன்று, த ய் - மகவு உறவு சீராக இல்லை. தந்தை, மகன் உறவு சொல்லவே வேண்டாம். உடன் பிறந்தான் உறவும் பங்க ளிக் காய்ச்சலாக மாறி விட்டது.

இறைவா! இந்த உலகத்தின் பொருளாதார வாழ்க்கை என்னைப் பாழ்படுத்தி விட்டது. இறைவா, என்னை எடுத் த ஸ்க, காப்பாற்றுக. மற்றவர்களுக்காக வாழும் அர்ப் பணிப்பு உணர்வினை உவந்து அருள் செய்க!

அன்பினாலாய உறவுகளே இந்த உலகவாழ்க்கையின் பயன் எனக்கருதி, வாழ்ந்திடும் பேருள்ளத்தினை வழங்குக. அனைத்துயிரும் சிவனருள் பெறும் பாத்திரங்கள் என்று கருதி அன்பு செய்யும் உள்ளத்தினைத் தா. ஆற்றலினைத் தா.

மண்ணுக்கும் விண்ணுக்கும் இணைப்பூட்டும் இணை யற்ற அன்பினை ஏற்றொழுகிட அருள் செய்க: பிணக்கை நீக்கி, உயிர்க்குலத்தை வாழ்வித்திடச் செய்யும் அன்பினை அருள் செய்க! ... -

தியாகப் பெருவாழ்வுக்குரிய அன்பினை அருள்செய்க! அன்பினாலாய உறவில் உலகம் ஒன்ற கிட உவந்தருள், செங்க! -