பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I62 திருவருட் சிந்தனை

என்னை உணர்த்தி நான் மனிதனாக வாழ அருள்க!

இறைவா, எந்தையே! நின் திருவடி போற்றி! இறைவா! நான் யார்?’ என்று ஆய்வு செய்தால் அல் லவr நான் உய்தி பெறலாம்.

நான் யார்? இந்த உடல:? உடலினும் வேறாய உயிரா? இல்லை, நானே கடவுளா? ‘நான்’ நானேதான்! எனக்குப் பெயர் ‘உயிர் அல்லது ஆன்மா’ என்பது.

நான் என்றுமே உள்ளவன். எனக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. நான் ஒரு அறிவுப் பொருள். எனக்குச் சுதந்தரம் உண்டு. என்னிடம் குறையும் உண்டு. நிறையும் உண்டு.

இறைவா, srsrszosortsaturi: நான் என்பதற்குப் பொருள் கற்றுக்கெடு! நான் மரபால் உனக்கு மகன் தொண்டன் என்று உணர்த்துக. நீ என்னை அறிவில் வளர்த்திடுக! நான் உய்தி நெறியில் செல்ல ஆர்வப் படுத்துக!

இப்பிறப்பிலேயே இன்ப அன்பினை எய்திட அருள் செய்திடுக! இறைவா, அட்டமா சித்திகளும் தா! ஆனால் அவை எனக்குத் துணையாக இருக்க நின் திருவடிக்கு ஆட்செய்யும் பேற்றினை அருள் செய்க!

இறைவா, நின் நிழலில் வாழும் நிலையின்ன அருள்க! நின் அருளில் திளைத்து வாழும் வாழ்க்கையை அருள் செய்க! நான் மனிதன்! மனிதனாகவே வாழ அருள் செய்க!