பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 185

உழைத்துண்ணும் மனிதனாக என்னை மாற்றுக!

இறைவா, நின் படைப்பின் அதிநுட்பத்தை அறியும் ஆற்றல் எங்களுக்கு ஏது? நீ எதிலும் உபரியிருக்கும் படியாகவே படைத்து இயக்குகிறாய் சான்றாக ஒரு வயிறு இரண்டு கைகள். இரண்டு கால்கள்.

கைகளும், கால்களும் இணைந்து உழைத்தால்-முறை யாக உழைத்தால் ஒரு வயிற்றுக்குப் போதாதா? இறைவா, போதும்! போதும்! கூடுதல் உழைப்பின் உபரியை நம் வாழ்க்கைக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் கரலாம்:

ஆனால், இறைவா வயிறு முட்டச் சாப்பிட நினைப்பது போல-எத்தனையோ பேருக்கு முழு உழைப்பு உழைக்க மனமில்லையே? சுவைத்து உண்ண ஆசைப்படுவது போலத் தமது கடமைகளைச் சுவைத்து மகிழ்ச்சியுடன் செய்ய மனம் வரவில்லையே? *

குறைபட்ட உழைப்பெல்லாம் குறைகளைத்தானே. தரும். குறித்த நேரத்தில் பசிக்கிறது என்ற கூறி உணவுக்குத் தேடி அலைகிறேன். என் உடலுக்க நான் ஒரு வஞ்சனையும் செய்ததில்லை. ஆனால் குறித்த காலத்தில் வேலை தேடித் திரிவதில்லை. -

சோம்ப்ல், கடமைப் பசியைத் தணித்துவிட்டது. இது மட்டுமா? மற்றவர்கள் உழைக்க அவர்களை ஏமாற்றிச் சுரண்டிப் பிழைப்பு நடத்தும் ஈனத்தனம் வேறு. உழைத் துண்ணும் மனிதனாக என்னை மாற்றுக! . . . .

கடமைகளைத் தேடி அலையும் மனம் தா! கிடைத்த கடமைகளையெல்லாம் பெரியது-சிறியது என்று பாராமல் ச்ெய்யும் மனப்பாங்கைத்தா! -

கடமைகளை முழுமையாகச் செய்தலே நிறைவான வாழ்க்கையை அமைக்கும் பாதை. நான் உழைத்து வாழவே விரும்புகி றேன். ‘ உழைத்து, வாழும் டினம் தா. இறைவா அருள் செய்க! . . “ |