பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளாt I 67

நம்பிக்கையே வாழ்க்கையின் ஆதாரமாக அருள்க!

இறைவா, நம்பிக்கைக்கு மிகுதியும் உரிய அண்ணலே! உன்னை நம்பியே கை தொழுகின்றேன்! இறைவா, என் தம்பிக்கை பெய்க்குமா?

‘நம்பின:t கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு’ என்பர் இறைவா, வாழ்க்கையை இ ஒத்துச் செல்வது தம்பிக்கையே யாம்.

ஆனால் நம்பிக்கை என்பது வாழ்ந: ரின் தொடக்கத்தில் காலை நேரத்தில் நல்லது க. லை உணவு உடலுக்கு நல்லது. இறைவா, காலை உணவு செரிக்கப் போதிய காலம் உள்ளது. உணவின் பயன: கிய உழைப்பை ஈடு செய்யவும் இயலும். ஆனால் இரவு உணவோ பயன் குறைவுடையது.

aa; வாழ்க்கையில் காலைப் பொழுதில் கொள்ளும் நம்பிக்கை, காலை உணவைப் போன்றது மாலைப் பொழுது நம்பிக்கை என்பது, இரவு உணவைப் போன்றது பயன் குறைவானது. -

என் வாழ்க்கையில் நம்பிக்கை கால் கொள்ளட்டும். காலை உணவு பயன் படுவதுபோல காலைப் பொழுதில் தான் கொள்ளும் நம்பிக்கை, நாள் முழுவதும் என் வாழ்க் கையை ஆவேசித்து நடத்தட்டும்.

இறைவா, நான் என்னை முதலில் நம்ப வேண்டும். என் ஆற்றலில் எனக்கு நம்பிக்கை வேண்டும். இந்த உலகத்தில் நசன், என் வாழ்க்கையில் நிறையச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். > . . - ‘ ‘ ‘,

நம்பிக்கை எனது வாழ்க்கையின் ஆதாரமாகிட அருள் செய்க. என்னைச் சுற்றி இருப்பவர்களை நான் நம்ப வேண்டும். - - -

இறைவா, - என்னுடைய. வாழ்க்கையின் ஆதாரம், நம்பிக்கையே! இறைவா அருள் செய்க: