பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.’

மெய்ப்பொருளை அனுபவமுள்ள அறிஞர்பால் கேட்டு உணர்வோரே வீடு பேரின்பம் பெறுவர் என்று திருவள்ளுவர் கூறுகிறார். தவானுபவமும் சிவானுபூதியும் நிறைந்தொளிரும் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என இறையருளைச் சிந்தித்து வழங்கியதே ‘திருவருட் சிந்தனை”

உலக உயிர்களில் சிறந்த மனித குலத்தின் பெரும் பேறு சிந்தனா சக்தியே. செல்வங்களில் சிறந்த செல்வ; சிந்தனைச் செல்வமே. இத் திருவருட்சிந்தனை வீடு பேறு பெற வழிகாட்டும் சிறப்புடையது. பிறவி நோய் அகற்றும் மா மருந்தாகும் தன்மையது.

நாம் தூய்மையாக சிந்திக்கச் சிந்திக்கத்தான் மனம் தெளிவு பெறும். செம்மனக் கோயிலில்தான் செம் பொருளைக் கண்டு மகிழக் கூடும். s

நறுமண மலர்களில்! தினையளவே தேனிருக்கும். நாளும் ஒரு சிந்தனையாக மலரும் இத்திருவருட் சிந்தனையோ நினைக்குந்தொறும் பேசுந்தொறும் தேன் சுரக்கும் தெவிட்டாத அமுதமாகும். வாழும் திறத்தால் எவரும் தெய்வமாகலாம். இதையேதான் திருவள்ளுவர்,

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்’ என்றார்.

வையகம் பயனுற வாழ வைகறைத் துயிலெழுந்து வைப்பு நிதியாகத் திகழும் திருவருட் சிந்தனையை! நாளும் ஒதி, உணர்ந்து, திருவடிப் பேற்றினைப் பெற்று மகிழ்வோமாக.