பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 7

அருள், என் வாழ்க்கையின் ஆக்கமாக அருள்க!

இறைவா! கயிலையை நான் காண வேண்டும். கயிலை வில் எழுந்தருளியுள்ள நின் திருக்கோலத்தைக் கண்டு மகிழ வேண்டும்.

இறைவா! உன் கோட்டையின் கதவுகள் சாத்தப் பட்டுள்ளன. பூட்டப்பட்டுள்ளன. அதைத் திறப்பதற்குரிய சாவியைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்!

இறைவா, நின் கோட்டையைத் திறப்பதற்குரிய சாவி யாகிய அருள், வேண்டும். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை.’’ என்பது அருள்வாக்கு. அருள்-அன்பு ஈனும் சேய், அன்பில்லாது அருள் வாராது.

அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டுதல் என் ஒழுக்கமாக வேண்டும். என் வாழ்க்கையின் உயிர் நிலை யாக அன்பு அமைதல் வேண்டும். அன்பை ஈன்று வளர்த் துப் பேணுவது உயிர் இரக்கமாகிய பண்பாடே.

இந்த உலகத்தில் வாழும் அனைத்துயிர்களிடத்திலும் எனக்கு அன்பு வேண்டும். எந்த உயிர்க்கும் தீங்கு நினைக்க லாகாது. இறைவா! இந்த பாக்கியத்தினை எனக்கு அருள் செய்க:

வையம் உண்ட பிறகு உண்ணவும், வையம் உடுத்திய பிறகு உடுத்தவும் எனக்குக் கற்றுத் தா. துய்த்தலிலும் துறத்தலிலும் என்னை ஈடுபடுத்து.

உயிர் இரக்கம் என் வாழ்க்கையின் கொள்கையாகட்டும். அன்பு செய்தல் என் வாழ்க்கையின் ஒழுக்கமாகட்டும்.

அருள் என் வாழ்க்கையின் ஆக்கமாக அமையட்டும்.

இறைவா, அருள் செய்க , , . . . . “