பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8U ... திருவருட் சிந்தனை

தான், என் நெறியில் நிற்கும் உறுதியினை அருள்க !

இறைவா, பித்தனே! உன்னைப் ‘பித்தன்’ என்று பாடிய பாடல்களைப்படி நான் மகிழ்கின்றேன்! ஆனால், புகழை விரும்புகின்றேன்! பெருமையை விரும்புகின்றேன் . ஏன் இறைவா, இந்த முரண்பாடு?

நான் பெருமையை விரும்பினால், புகழை விரும்பினால் அதைக் கொடுப்பவர்களையே நாடுவேன்! அவர்கள் பெரும் பாலும் இச்சை மொழிகளையே பேசுவார்கள்! அதுபோலவே திரும்பிக் கொச்சை மொழியும் பேசுவார்கள்!

இறைவா, இந்த உலகத்தில் எல்லோரையும் திருப்தி செய்ய இயலுமா? ஒருபொழுதும் இயலாது. இறைவா, எனக்கு உடன்பாடில்லாதவர்களே இந்த உலகில் மிகுதி.

என் மீது பொறாமை கொண்டுள்ளவர்களே அதிகம்! இவர்களையெல்லாம் நான் திருப்தி செய்வது என்பது. இயலாத காரியம், அவசியமில்லாத ஒன்று. -

இறைவா, நீ என் நெஞ்சத்தில் நின்றுணர்த்துகின்றனை என் ஞானாசிரியர்கள் அப்பரடிகளும், திருவள்ளுவரும் உள் நின்று உணர்த்துகின்றனர். இது போதாதா எனக்கு:

இந்த வையகத்தில் நடந்து வந்த வரலாற்றின் வழி, எதிர் காலத்தை உய்த்துணரும் பொழுதில் என் நடையே சரி என்று தோன்றுகிறது. இதுபோதும். இறைவா! எனக்கு மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள், என்ன கூறுகின் றார்கள் என்பது பற்றிய கவலை வேண்டாம். -

தான் என் நெறியில் நிற்கும் உறுதியினை அருள் செய்க! சமூகம், “பேய்’ என்று கூறினாலும் சரி! ஊராக் கூறும் வசையெலாம் வாழ்த்தென ஏற்றுக் கொள்ளும் இதயத்தினை அருள் செய்க! நான் உன் அடியான்! மக்கள் சேவகன்! இதுவே என் வாழ்வாக அமைய அருள் செய்க்: . “. . .