பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 187

உன் அடிமையான நான் அவலப்படாது அருள்க

இறைவா! ஏன் இந்தச் சோதனை? நான் அறியாதவன்! வலிமையற்றவன்! உன் கருணையால் உய்ய வேண்டியவன்! அப்படி இருந்தும் ஐம்பொறிகளாகிய கள்வரோடு கூட்டு வைத்துக் கொடுத்தனை!

ஐம்பொறிகளின் கூட்டு, என் வளர்ச்சிக்குத் துணையாக இல்லை! நான் நாள்தோறும் இவைகளுடன் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது! போராட்டத்திலும் அவை களே வெற்றி பெறுகின்றன: இறைவா, என்னைக் காப்பாற்று: -

இவைகளுடன் கூட்டு இப்போதைக்கு அகலாது போலிருக்கிறது. இவைகளுக்கு வேறு நல்ல வேலை கொடுத்து எனக்கு உண்மையான கூட்டாக இருக்கப் பணித்தருள் செய்க!

ஐம்பொறிகளின் சேட்டைகளால் நான் செய்த பிழை களைப் பொறுத்தாள்க! இனிமேல் பிழைகள் வராமல் காத்தருள்க! நான் உனக்கு அடிமை; நீ என்னை ஆண்டு அருள் செய்யும் கடமை உடையவன்! உனக்கு அடிமை பூண்ட நான் அவலப்படுதல் ஆகாது! என்னைக் காப்பாற்று:

என் கண்களுக்கு கைபுனைந்து இயற்றாத அழகு மிக் குடைய இயற்கை எழிலைக்கண்டு மகிழ ஆணை தத்திடுக! என் செவிகள் நாளும் நல்லனவே கேட்க, தின்னுடைய பொருள் சேர் புகழைக் கேட்கவேண்டும். .

. இறைவா, தின் புகழை நான் நாளும் இசைத்திடுதல், வேண்டும். நின்னுடைய மனமே நுகர்ந்து அனுபவித்திடு தல் வேண்டும். இறைவா! இயற்கை எழிலைக் கண்டு மகிழ்ந்து வாழ அருள் செய்க!