பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 திருவருட் சிந்தனை

நானே பொறுப்பேற்கும் நயத்தக்க வாழ்வை அருள்க!

இறைவா. தேசமெலாம் விளங்கும் என் தெய்வமே! அந்தத் தேசத்தில் நான் ஒருவன் இல்லையா? என்னை விளக்கமுறச் செய்யக் கூடாதா?

இறைவா, எனக்கு ஏராளமான செய்திகள் தெரியும் அதுவும் அடுத்தவர் குற்றங்கள் அனைத்தும் தெரியும்: ஆனால் இறைவா, எனக்கு என்னைப் பற்றித் தெரியாது! எனக்குத் தெரிந்ததும் தெரியாது! தெரியாததும் தெரியாது!

-

நான் யார்? ஒரு மனித உருவம். அவ்வளவுதான்? இறைவா, இஃதோர் இரங்கத்தக்கநிலை. என்னைக் காப் பாற்று! - -

- என்னை நானே துன்பத்தில் ஆட்படுத்திக் கொள்கிறேன் எனக்கு தானே எதிரி! இறைவா, என்னை அறியும் அறிவை துணிவை, எனக்குத் தந்தருள் செய்க!

நாள்தோறும் என் வாழ்நாளின் கணக்கையும் சரிபார்த்து ஆன்ம லாபத்தில் இழப்பு-ஈட்டம் பார்க்கும் பழக்கத்தினை ஏற்றுக் கொள்ள அருள் செய்க! நான் விளக்கமுற என்னை நானே ஆய்வு செய்து கொண்டு திருத்தமுறுதல் வேண்டும்.

இறைவா, தன்னாய்வு முறையைத் துணிவோடு ஏற்

கும் நிலையினை அருள் செய்க: ஒரே வழி என்னை மற்ற வர் ஆய்வு செய்து சொன்னாலும் ஏற்கும் மனப்பாங்கினைத் தா! நான் விளக்கமுற நானே பொறுப்பேற்கும் நயத்தக்க வாழ்வினை வழங்கி அருள் செய்க: