பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 * * * x திருவருட் சிந்தனை

இறைவா, மண்ணில் ஞானதீபம் ஏற்றுக!

இறைவா, அன்று ஏசுபெருமான், மண்ணில் விண் ணரசு வேண்டும் என்று விண்ணப்பித்தார்! அது மிகப் பெரியது மட்டுமன்று. புத்திசாலித்தனமான வேண்டு கோளுமாகும். ஆம், இறைவா!

இன்று மண்ணை மனிதர்கள் ஆளுகின்றனர்! எப்படி ஆளுகின்றனர்? இறைவா, இந்த அரசினால் யாது நன்மை மாறாகத் தீமையே நன்மைபோல ஊடுருவுகிறது: ஆம், இறைவா! சாராயக்கடைகளின் சாம்ராஜ்யம்! பரிசு மழை? விலைவாசிகள் கட்டுப்பாடின்றி ஏறிக் கொண்டே போகின்றன! -

ஆசிரியர்கள் அடியாட்களாகின்றனர்! சாமியார்கள்

கலகக்காரர்களாகின்றனர்! முற்றுந் துறந்த முனிவர்கள் இடையிலும் புகழ்ப்போட்டி!

இறைவா, தாங்க முடியவில்லை இந்தக் கொடுமை! இறைவா, நின்னரசை மண்ணில் நிலைநாட்டு! இறைவா, மண்ணில் ஞானதீபம் ஏற்றுக!

‘நான்!’ ‘எனது’ என்னும் செருக்கினை அகற்று. சாராயக் கடைகளை மூடு பரிசு சீட்டுகளை நிறுத்து! அன்பு அமைதியே வாழ்க்கை அன்பமைதியை வழங்கி வாழ்வித்திடுக!

இறைவா, அன்பு ஊற்றெடுக்கும் இதயமே எனக்குத் தேவை. மண்ணில் ஞானதிபத்தினை ஏற்றி அருள்க!