பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் -199

நீ பெரியோன்! வள்ளல்! அதற்கேற்ப அருள் செய்க!

இறைவா, நான் உனக்கு அடிமை! ஆயினும் உன்னு டைய அருளை யாசிக்கின்றேன்! அன்பிலே, உவகையின் முகட்டிலே நிற்கும் பொழுதெல்லாம் என்னை இழக் கின்றேன். இந்த நிலையில் அறிவும் கை கொடுப்பதில்லை.

இறைவா, அறியாமைச் சூழ்நிலையில் நான் அனாசார மான காரியங்கள் பலவற்றைச் செய்கின்றேன்.

இறைவா, உனக்கு உவப்பில்லா த்னவாக வுள்ளகாரியங் கைைளயும் செய்கின்றேன். இறைவா! இவையெல்லாம் நான் வேண்டும் என்று செய்வதில்லை! அறியாமையினால் செய்கிறேன். -

இறைவா என் சிறுனம் கருதிப் பொறுத்தருள் செய்க. நான் என் பிழைகளைத் திருத்திக் கொள்ள முயல்கின்றேன். நியும் என்னைப் பிழைகளிலிருந்து மீட்பாயாக!

இறைவ! நான் அறிவில்லாதவன் என்ற உண்மையை அறிந்தே என்னை ஆட்கொண்டனை! நான் அறியப் பதங் களைத் தந்தருளினை! -

இன்று என் பிழைகளைக் கண்டு சீறலாமா? அல்லது பாராமுகமாய்த்தான் இருக்கலாமா? ஒருகாலும் கூடாது.

இறைவா, எங்கள் நாட்டில் பிழுக்கையை நீக்கி பாலைக் கொள்வர். மணல் ஒட்டிய கனிகளை ஊதித் தூய்ம்ை செய்து உண்பர்! இறைவா! அங்ஙனமே நான் உனக்கு:

- இறைவா, நான் உன் அடிமை, என் பிழைகளைத் தவிர்த்து என்னை ஆட்கொண்டருள்க! நீ பெரியோன் அதற்கேற்ப அருள் செய்க்

- ‘