பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BS திருவருட் சிந்தனை

அன்பால் அனைத்துலகும் இணைந்து வாழுஅருள்க!

இறைவா, சிறியோர் செய்த பிழையெல்லா ம் பொறுத்தருளும் பெரியோய்! இன்று நான் யாரிடத்தும் அன்பைக் காட்டத் தயங்குகின்றேன். அல்லது அன்பைப் பெயரளவில் போலியாகக் காட்டுகிறேன், அல்லது அன்பு காட்டுதல் என்ற பெயரில் அன்பை விலை பேசுகிறேன் .

இறைவா, அன்புகாட்டக் காரண காரியங்களைத் தேடுகிறேன். ஏதோ, எப்போதோ தவிர்க்க முடியாத போது தான் நிர்ப்பந்தச் சூழ்நிலையில் அன்பு காட்டு கிறேன். இதனை அன்பு என்று சொல்லலாமா? சொல்லக் கூடாது! இதுவும் ஒரு வகையான சூகே.

யாதொகு குறிக்கோளுயின்றி இயற்கையாக அன்பு செய்தலே அன்பு. அன்பு காட்டக் காரணம் அவசியம் இல்லை. அன்பு காட்ட வேண்டுமா வேண்டாமா என்று அறிவு ஆராய்ச்சி ச்ெய்ய வேணடிய அவசியமில்லை, படைப்பின் இலட்சியமே அன்பு செய்தல்தான்.

அன்பு இல்லாத இடத்தில் குறைகள் தோன்றும், குற்றங்கள் தெரியும், அன்பின்மையே குறை, - குற்றங் களுக்குக் காரணம், அன்பின்மை, பகைமையைத் தோற்று விக்கும், வளர்க்கும். -

அன்பு காட்ட குற்றங்குறைகள்.தடையாக அடிையா! அமைய இயலா. ஒருவர் எனக்குத் துன்பம் செய்தாலும் தாங்கிப் பொறுத்துக் கொண்டு மாற்ற வேண்டும். அதற்காக எதிர்ப்பகை காட்டுதல் தன்டின்று.

இறைவா, எனக்கு அன்பு செய்யும் உள்ளத் தினைத் தா. அன்பு செய்வதை இயல்பூக்கமாக்கு. தொடர்ந்து அறிவார்ந்த நிலையில் அன்பைப் பேணி வன்ர்க்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் கற்றுக் கொடு

அன்டிால் அன்னத்துலகும் இணந்து வாழ்த்திட்அருள்க!