பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளச் 89

வேற்றுமையில் ஒற்றுமைகாணும் மனம் அருள்க!

றைவா, சோதியனே! துன்னிருளே! தின் இயல்

போற்றி! போற்றி!! ஒளி, இருள், உண்மை, இன்மை, இவை உலகத்தியற்கை இவ் வேறு பாடுகள் தவிர்க்க இயலாதன, என்றும் உலகம் ஒரே அச்சாக இருந்த தில்லை, இருக்கப் போவதும் இல்லை.

இறைவா, எனது உடலிலேயே விலை மதிக்கமுடியாத உயிரும் இருக்கிறது. உயிருக்கு உயிராக நீயும் இருக் கிறாய். அதே உடம்பில் அழுக்கும் மலங்களும் இருக்கத் தான் செய்கின்றன. நான் மூக்கைப் பிடித்துக் கொண்டு உடம்பைக் காலி செய்து விட்டேனா? அல்லது நீ தான் ஓடி விட்டாயா?

உலகத்தில் ஏராளமான வேற்றுமைகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் தாம் நுகர்வுக்கு இனிமையாக உள்ளன. இவ் வேறுபாடுகள்தாம் உலக இயக்கற்திற்கு உந்து சக்தி பாக இருந்து வந்துள்ளன; இருந்து வரு கின்றன. இங்க:ன ம் வேற்றுமைகளுக்கிடையே வாழும் நான் என்னள் வில் மட்டும் வேற்றுமைகளைச் சீரணிந்துக் கொள்ள மறுக்கிறேன். o --

கருத்து வேற்று ை0கள், கொள்கை வேற்றுமைகள், கோட்பாட்டு வேற்றுமைகள் - இவைகளையெல்லாம் நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன். இந்த வேற்றுமைகளுக்கு இசைந்தே இணைந்தே வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. - - -

இறைவா, இந்த அடாத வழியிலிருந்து திருப்பி அழைத்துக் கொள். வேற்றுமைகளைப் பரந்த மனப் பான்மையுடன் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை அருள் செய்க! - -- - --

வேற்றுமைகளின் காரணமாகப் பகை கொள்ளாத பேருள்ளத்தினை வழங்கிடுக. வேற்றுமைகள் பிரிவினை கள்: கி விடாதவாறு காத்தருள் செய்க! -

ஒன்றாக வாழ்தல், நன்றாக வாழ்தலுக்கு அடிப்பண்ட் என்ற உன் உபதேசத்தை உயிர்க் கொள்கையாக ஏற்பேன் வாழ்வேன், அருள் ச்ெiiக!” * * . . . . . . -