பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4() திருவருட் சிந்தனை

யார்மாட்டும் கருணை காட்டிட அருள் செய்க!

இறைவா, கருணைக் கடலே. எனக்கு இதயம் என்ற ஒன்றைத் தந்தருளினை. ஏன்? இதயம் உடல் முழுதுக்கும் கருதி, ஒட்டத்தை முறைப்படுத்திப் பாய்ச்சுகிறது!

இதயம் வாழ்க்கையின் மையம். உடல், உயிர், இதயம், குருதியோட்டம், வாழ்தல் இவற்றின் நோக்கந்தான் என்ன? பயன்தான் என்ன? வறிதே தின்று வாளா சாதல் அல்லவே.

இந்த உலகில் ஒவ்வொரு சிறுபொருளும் பயன்படுகிறது. ான், கழிவுப் பொருள்கள் கூட மீண்டும் படைக்கும் உரமாகின்றன. நான் ஏன்? என் இதயம் எதற்கு இறைவா? கருணை பொழிவதற்காக இதயம் * . . . . .

இன்று என்னிடம் ஏது கருணை? கருணைக் கிழங்கு தான் இருக்கிறது. இறைவா, மன்னித்துக் கொள். நான்’ எனது’ என்ற பாசக் கயிறுகள் வலிமை பெற்றவை. அவை என் இதயத்தை நெகிழவிடாமல் இறுகப் பிணைத் துள்ளன. : -

இறைவா, போதும் போதாததற்குப் பணம் வேறு. ‘இலாபம்’ என்ற ஆசை என் இதயத்தைக் கல்லாக்கி விட்டது. -: - இறைவா, நீ தான் கல்லைப் பிசைந்து கனியாக்கும் வல்லாளனாயிற்றே. என் பாசக் கட்டறுத்து என் இதயத்தை விடுதலை செய் -

எனக்குள்ள பணத்தாசை எல்லை கடந்த இலாப நோக்கத்தால் பேய் உருக் கொண்டு விட்டது. இந்தப் பேயின் கொட்டத்தை அடக்கு. நான் மனிதன். - மனிதனுக்கு இதயம் வழங்கப் பெற்றதே கருணை பொழியத்தான். இறைவா, இது எனக்குத் தெரிந்ததே, ஆனாலும் இயலவில்லை. - - - -

என் இதயத்தைக் கருணை பொழியும் , இதயமாக மாற்றியருள்க! எங்கும் கருணை, எப்பொழுதும் கருணை, யார் மாட்டும் கருணை, இறைவா, அருள் செய்க.