பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5th திருவருட் சிந்தனை

பயன் கருதா உழைப்பில் வாழ அருள் செய்க!

இறைவா, சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பொறுத்தருளும் பெரியோனே! என் பிழைகள் பொறுத்து ஆள்வதற்கு ஏன் தயக்கம்? நான் எண்ணற்ற பிழைகளைச் செய்கிறேன், திரும்பத் திரும்பச் செய்கிறேன்.

இறைவா, எனக்குப் படிப்பறிவும் துணையில்லை! பட்டறிவும் கைகொடுக்க மறுக்கிறது. நான் விழுந்து விழுந்து எழுகிறேன். என் செய்ய? நான் ஒரு பேதை!

இறைவா, என் அறிவைத் திருத்து. என்னைத் அறி வார்ந்த ஆள்வினையில் உய்த்துச் செலுத்து. என் கண்கள் காண்க. காண வேண்டுவனவற்றைக் காண்க. ‘. .

புலன்கள் ஒன்றிய காட்சியை அருள்செய்க காட்சியைக் கற்றிடும் சாதனமாக ஏற்றிடும் திறனை அருள் செய்க!

‘கண்டதைப் படித்தால் பண்டிதனாவான்’ என்ற பழமொழி என் வாழ்வில் உண்மையாகட்டும்.

என்னைச் சுற்றிலும் உள்ள இயற்கையை - இயற் கையின் பொருளடைவுமிக்க செயற்பாட்டைநான் கற்றறிதல் வேண்டும். - - -

இயற்கையின் அழகில்-இளமையில்-பயன்பாட்டுத் திறனில் நான் கற்றுக் கொள்வனவற்றைக் கற்றுக்கொள்ள அருள் செய்க மலர்கள் பூத்துக் குலுங்கிய செடிகள் தாயு மானாருக்கு இறைக் காட்சியைத் தந்தன. - -

நான் இயற்கையை வாழும் காட்சியாக, பயன் கருதா உழைப்பின் காட்சியாகக் கண்டு நாளும் அங்ஙனமே வாழ்ந்திட அருள் செய்க!

ஓயாது உழைத்திடும் உழைப்பாளனாக அருள் செய்க: என் கண் காண்பனவற்றைக் காண்க! எனக்குக் காட்ட வேண்டுவனவற்றைக் காட்டுக. இறைவா அருள் செய்க!