பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 திருவருட் சிந்தனை

இறைவா என்னுடன் உறவு கொள்ள எழுந்தருள்க!

இறைவா, ஆண்டவனே! நின்னருள் போற்றி! போற்றி: இறைவா, நீ இன்று காணப்படும் பொருளாக இல்லை. ஆதலால் இல்லாத பொருளாகவும் ஆகிவிட்டாய். இறைவா, நீ காட்சிப்பொருளாக, சாட்சிப் பொருளாக மாறி விட்டாய்.

இறைவா, நீயும் முன்போல் இயக்கத்தில் இல்லையோ? உன்னை விரும்பித் தேடிக் காண்போரும் உன்னோடு உறவு வைத்துக் கொள்வோரும் இல்லை. ஏன் இறைவா, இந்த நிலை?

எனக்கும் உனக்கும் உள்ள உதவு இன்று, நேற்றுக் தோன்றியதன்றே! தமது உறவு இப்படிப் பலவீனமான தாக இருக்கலாமா? ஏன், இறைவா? நான் விரும்பி அழைக்கவில்லை என்று கூறுகிறாயா? இது அபாண்டமான குற்றச் சாட்டு: -

நான் உண்மையைச் சொல்கிறேன், உனக்கு நிறைய பூசைகள் செய்திருக்கிறேன். எண்ணற்ற அருச்சனைகள் செய்திருக்கிறேன். பலசறு ஆயிரம் உருமந்திரம் ஜபித் திருக்கிறேன். இறைவா. என்ன சிரிக்கிறாய்?

இவை உனக்கு ஆகாதவை. பொருளற்ற சடங்குகள் என்கிறாயா? இவற்றில் அன்பு இல்லையா? உறவுஇல்லையா ஈடுபாடு இல்லையா? இறைவா, என்னை மன்னித்துக் கெர்ள்.

நான் இனி உன்னேர்டு உரையாடத் தகுதியுடைய சபதத்தினைச் செய்வேன். உன்னோடு பேக்வேன், உன்னிடம் நெருங்கி உறவாடுவேன். இறைவா, அருள் ச்ெய்க: 4 -

நான் செய்யும் சபத்தினை ஏற்றருள் செய்க) என்னுடன் உறவு கொள்ள இங்கே எழுத்தடுள்: .